மசூதிக்குள் பதுங்கிய தீவிரவாதிகள்.. சுற்றி வளைத்து சுட்ட வீரர்கள்.. 24 மணி நேரத்தில் 8 பேர் பலி..!
ஜம்மு காஷ்மீரில் 8 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்
ஸ்ரீநகர்: மசூதிக்குள் ஒளிந்து கொண்டிருந்திருக்கிறார்கள் 2 தீவிரவாதிகள்.. அவர்கள் உட்பட மொத்தம் 8 தீவிரவாதிகள் இந்த 24 மணி நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.. 24 மணி நேரத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 இடங்களில் என்கவுண்டர் செய்து 8 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர்!
ஜம்மு காஷ்மீரில் சோபியான், புல்வாமா ஆகிய 2 மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் நேற்றில் இருந்து என்கவுன்ட்டரில் ஈடுபட்டனர்.. இதில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பற்றி பாதுகாப்பு படை அதிகாரிகள் சொன்னதாவது, "தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் பாம்போர் பகுதியில் மீஜ் என்ற பகுதி உள்ளது.. இங்குதான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ஒரு தகவல் கிடைத்தது.. அதனால் நேற்று காலை அந்த பகுதி முழுவதையும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

துப்பாக்கி
ஆனால் இந்த விஷயம் அறிந்த அந்த தீவிரவாதிகள், உடனே துப்பாக்கியால் சுட்டு தாக்குதலை நடத்த தொடங்கினர்... அதனால் நம் பாதுகாப்பு படையினரும் பதிலடி தந்தனர்.. அப்போது ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார்... இதை பார்த்ததும் மற்ற 2 தீவிரவாதிகள் அருகே இருந்த ஒரு மசூதிக்குள் ஒளிந்து கொண்டனர்.. எப்படியும் அவர்கள் வெளியே வந்துதான் ஆகவேண்டும் என்பதால், நேற்றிரவு முழுவதும் விடிய விடிய பாதுகாப்பு படையினர் அங்கேயே வெளியே பொறுமையாக காத்திருந்தனர்.

தீவிரவாதிகள்
இன்று காலை மசூதியில் 2 தீவிரவாதிகளையும் வெளியே வர போலீசார் முடிவு செய்தனர்.. அதற்காக மசூதியிலிருந்து வெளியே வரவழைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.. இதை கண்ட 2 பேரும் அலறி அடித்து கொண்டு மசூதியை விட்டு வெளியே வந்தனர்... அந்த சமயத்தில் இருவருமே பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்'' என தெரிவித்தனர்.

மசூதி
அதேசமயம், அவர்களை வெளியே கொண்டு வர கண்ணீர் புகைக்குண்டுகள் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டதே தவிர, துப்பாக்கிச் சூடு ஏதும் மசூதிக்குள் நடத்தப்படவில்லை... என்று விளக்கமும் தரப்பட்டுள்ளது. மசூதியின் புனிதத்தன்மை காக்கப்பட வேண்டும் என்பதில் பாதுகாப்புப் படையினர் மிக மிக உறுதியாக இருந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

என்கவுன்ட்டர்
அதேபோல, சோபியான் மாவட்டத்தில் முனாத் - பாந்த்பாவா என்ற பகுதியிலும் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக தகவல் கிடைக்கவும் அங்கேயும் பாதுகாப்பு படை வீரர்கள் களம் இறங்கினர்.. அப்போது பதுங்கியிருந்த அந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்த, பதிலுக்கு வீரர்களும் சுட்டனர். அப்போது 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 8 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications