மத்தியில் பாஜக ஆட்சிதான்.. எக்ஸிட் போல் முடிவுகள் திட்டவட்டம்
டெல்லி: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியே அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று அனைத்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பான எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
16வது லோக்சபா தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று முடிவடைந்த நிலையில் ஊடகங்கள் எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டன. இதில் அனைத்துமே பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் மத்தியில் ஆட்சியை அமைக்கும் என்று தெரிவித்துள்ளன.

சி.என்.என்.ஐ.பி.என்
சி.என்.என்.ஐ.பி.என்- சி.எஸ்.டி.எஸ்.- லோக்நிதி இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் பார்திய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 270 முதல் 282 இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவித்திருந்தது. இதில் பாஜக மட்டுமே 230-242 இடங்களைக் கைப்பற்றுமாம். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியோ 92 முதல் 102 இடங்களைத்தான் கைப்பற்றுமாம்.

ஏ.பி.பி. நியூஸ்
ஏ.பி.பி. நியூஸ்- நீல்சன் நிறுவனம் வெளியிட்ட எக்ஸிட் போலிலும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 281 இடங்களிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 97 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ்
டைம்ஸ் நவ்- ஓஆர்ஜி இணைந்து நடத்திய எக்ஸிட் போல் முடிவில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 249 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 148 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா டிவி- நியூஸ் எக்ஸ்
இந்தியா டிவி மற்றும் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சிகளோ பாஜக தலைமையிலான அணிக்கு 289 இடங்கள் கிடைக்கும் என்கிறது.

சி வோட்டர்
சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பிலும் பாஜக அணிக்கு 289 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் அணிக்கோ 101 இடங்கள்தான் கிடைக்குமாம்.

இந்தியா டுடே
இந்தியா டுடேவின் எக்ஸிட் போலில் பாஜக அணிக்கு 261-283 இடங்கள் கிடைக்குமாம். இப்படி அனைத்து எக்ஸிட் போல் முடிவுகளுமே மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சிதான் அமையும் என்று அடித்துக் கூறுகின்றன.

ஆஜ்தக் டிவி
பாஜக கூட்டணி 298 இடங்களும், காங்கிரஸ் கூட்டணி 93 இடங்களும் பெறும் என்கிறது ஆஜ்தக் டிவி.

ஜீ நியூஸ்
பாஜக கூட்டணி 299, காங்கிரஸ் கூட்டணி 112 இடங்களில் வெல்லும் என்கிறது ஜீ நியூஸ்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications