இந்தியாவிலேயே அதிக ஆடம்பரத்துடன் நடந்த அரச குடும்ப வாரிசுகளின் திருமணம்.. செலவு எவ்வளவு தெரியுமா?
அகமதாபாத்: குஜராத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு அரச குடும்ப வாரிசுகளின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக மொத்தம் செலவு செய்யப்பட்ட தொகையை இப்போது கேட்டால் கூட வியக்கும் படியாக உள்ளது. ஆனாலும் முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்தோடு ஒப்பிடும் போது அரச குடும்பத்தினர் செலவிட்ட தொகை ரொம்பவே குறைவுதான்.
ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி - ஆனந்த பரிமல் ஜோடிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. நாடே வியக்கும் அளவுக்கு இந்த திருமணம் பிரமாண்டமாக நடந்தது. இந்த திருமணத்திற்கு மட்டும் ரூ.700 கோடியை முகேஷ் அம்பானி செலவிட்டார். இந்தியாவிலேயே அதிக செலவில் நடைபெற்ற திருமணமாக இதுதான் கருதப்படுகிறது.

அதேவேளையில், கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு திருமணமும் ஆடம்பரமாக நடைபெற்றுள்ளது. பணத்தை தண்ணீராய் செலவு செய்து இந்த திருமணம் நடைபெற்றது என்று சொல்லப்படுகிறது. குஜராத்தின் ராயல் குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஜெய்தீப் ஜடேஜா மற்றும் இளவரசி ஷிவ்ட்மிகா திருமணத்திற்கு தான் அம்பானி குடும்பத்தினரை விட அதிக செலவு செய்து நடத்தியிருக்கிறார்கள்.. அரச குடும்பத்து வாரிசுகள்..
25 ஆயிரம் விருந்தினர்கள்: இந்த திருமணத்திற்காக ஒட்டு மொத்த ராஜ்கோட் நகரமே விழாக்கோலம் பூண்டு இருக்கிறது. ராஜ்கோட்டில் உள்ள ரன் ஜித் விலாஸ் என்ற அவர்களின் பாரம்பரிய அரண்மனையில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த அரண்மனை 100 க்கும் மேற்பட்ட ரூம்களை கொண்டது. மிகப்பெரிய புல்வெளி தரையுடன் கூடிய அரண்மைனையில் விருந்தினர்களுக்கு தடல் புடலாக விருந்து நடைபெற்றுள்ளது.
திருமணத்திற்கு பல விஐபிகளும் பங்கேற்றுள்ளனர். சுமர் 25 ஆயிரம் விருந்தினர்கள் பங்கேற்ற திருமணத்தில் விருந்திற்கு மட்டும் பல கோடிகள் செலவிடப்பட்டதாம். அதுவும் வந்த விருந்தினர்கள் பலரும் தனி விமானத்தில் வந்தவர்கள். அப்படியென்றால் எந்த அளவுக்கு ஆடம்பரமாக இந்த திருமணம் நடைபெற்று இருக்கும் என்று யூகித்துக் கொள்ளுங்கள்.
ரூ.150 கோடி செலவு: திருமணத்தின் போது ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கும் உணவு விருந்து அளித்து இருக்கிறார்கள். அது போக தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.7-8 கோடி வரை நிதி உதவியாக அளித்தார்களாம். ஆனால் இவ்வளவு ஆடம்பரமாக செலவிட்டாலும் முகேஷ் அம்பானி தனது மகள் திருமணத்திற்கு செய்த செலவில் பாதி கூட ஈடாகவில்லை.
அதாவது குஜராத்தில் அரச குடும்ப வாரிசுகளுக்கு நடைபெற்ற திருமணத்திற்கு சுமார் ரூ.150 கோடி செலவிடப்பட்டதாக சொல்லப்படும் நிலையில், அம்பானி தனது மகள் இஷா அம்பானி திருமணத்திற்கு ரூ.750 கோடி செலவு செய்தார். இஷா அம்பானி அணிந்து இருந்த ஒரு லெஹங்கா ஒன்றின் விலை மட்டுமே ரூ.90 கோடி ஆகும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications