"லெஜண்ட்".. ரூமிலேயே சுருண்டு விழுந்து.. காற்றில் கலந்த கே.கே.. "உயிரின் உயிரே".. கதறும் ரசிகர்கள்
பாடகர் கேகேவின் கடைசி வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது
கொல்கத்தா: திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த பிரபல பாடகர் கே.கே. இதையடுத்து, இவரது குடும்பத்தினரின் ஒப்புதலை பெற்ற பிறகு, அவர் இறப்பு குறித்து நீதி விசாரணை நடத்தவும், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. இதனிடையே, கடைசியாக இவர் பங்கேற்ற இசைநிகழ்ச்சியில் ரசிகர்களால் எடுக்கப்பட்ட வீடியோ, தற்போது சோஷியல் மீடியாவில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Recommended Video
கேகே என பிரியத்துடன் ரசிகர்களால் அழைக்கப்படுபவர் கிருஷ்ணகுமார் குன்னத்.. 53 வயதாகிறது.. இவர் மலையாள குடும்பத்தில் பிறந்தவர்.. ஆனால், டெல்லியில் வசித்து வந்தார்..
தமிழ், தெலுங்கு, ஹிந்தி கன்னடா, மலையாளம் என இந்தியாவின் முக்கிய மொழித் திரைப்படங்களில் பல பாடல்கள் பாடியுள்ளார்.. தமிழில் மட்டுமே 50-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.. பாடிய அத்தனையும் சூப்பர் ஹிட் பாடல்கள்..

ஜிங்கிள்ஸ்
சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பேயே ஜிங்க்கிள்ஸ் (Jingles) எனப்படும் விளம்பர பாடல்களை பாடியுள்ளார். 3500க்கும் மேற்பட்ட விளம்பர பாடல்களை பாடி மக்களிடம் அப்போதே பரிச்சயமானவர்.. இவரது குரல் வளத்தை கண்டறிந்த ஏ.ஆர்.ரஹ்மான், காதல் தேசம் படத்தில், எடுத்த எடுப்பிலேயே 2 பாடல்களை வழங்கினார்.. "கல்லூரிச் சாலை", "ஹலோ டாக்டர்" போன்ற பாடல்களை பாடியதன் மூலம் தமிழக மக்களுக்கு நன்கு பரிச்சயமானார்.. இன்று இந்தியா முழுவதும் கேகே-க்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருந்தாலும், சினிமாவில் பாடிய முதல் பாடல்களாக கருதப்படுவதே காதல் தேசம் பாட்டுக்கள்தான்.

சிறகு முளைத்தது
தொடர்ந்து மின்சார கனவு படத்தில், 'ஸ்டராபெர்ரி கண்ணே', உயிரோடு உயிராக படத்தில் 'பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்', செல்லமே படத்தில் 'காதலிக்கும் ஆசையில்லை', காக்க காக்க படத்தில் 'உயிரின் உயிரே', 7ஜி ரெயின்போ காலனியில் 'நினைத்து நினைத்து பார்த்தேன்', காவலன் திரைப்படத்தில் 'பட்டாம்பூச்சி கூப்பிடும் போது', மன்மதன் திரைப்படத்தில் 'காதல் வளர்த்தேன்' உள்ளிட்ட பல்வேறு காதல் பாடல்கள், இவரது குரல் வளத்தால் உயிருடன் உலா வந்தன.

ஒல்லிக்குச்சி உடம்புக்காரி
அதேபோல, ரெட் படத்தில் 'ஒல்லிகுச்சி உடம்புக்காரி', எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் 'வச்சிக்க வச்சிக்க வா இடுப்புல', அந்நியன் படத்தில் 'அண்டங்காக்கா கொண்டக்காரி', கில்லி படத்தில் 'அப்படிப்போடு போடு' என போன்ற மாஸ் கிளப்பும் காதல் பாடல்களுக்கும் கேகேவின் காந்த குரல் கச்சிதமாக பொருந்தின... இதனால் 90களின் காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடகராக அங்கீகாரம் பெற்றார் கேகே... பிறகு, 1999-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக கே.கே. பாடல் பாடியுள்ளார். விரைவில் வெளிவரவுள்ள லெஜண்ட் படத்திலும் 2 பாட்டு பாடியிருக்கிறாராம்.

திடீர் மாரடைப்பு
இந்நிலையில், நேற்றைய தினம், கொல்கத்தாவில், குருதாஸ் நஸ்ரூல் மன்சா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றிருந்தார்.. பாடல் பாடி கொண்டிருக்கும்போதே உடல்நலம் குன்றியுள்ளது.. பிறகு ரூமுக்கு வந்துள்ளார்.. அங்கே நிலைமை மோசமாகி மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது... பிறகு ரூமிலேயே மயங்கி விழுந்துள்ளார்.. இதனால், உடனடியாக கொல்கத்தா சிஎம்ஆர்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்கள்.. டாக்டர்கள் போராடியும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் கேகே. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

போஸ்ட் மார்ட்டம்
கே.கே. மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் எம்பி., ராகுல் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.. இதனிடையே, கொல்கத்தா நியூமார்க்கெட் போலீஸ் ஸ்டேஷனில் கேகே மரணம் குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்... இவரது குடும்பத்தினரின் ஒப்புதலை பெற்ற பிறகே, இறப்பு குறித்து நீதி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.. அதற்கு பிறகு அவரது உடலை போஸ்ட் மார்ட்டம் செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில், அவரது உடலை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கடைசி பாடல் வீடியோ
இவர் நேற்று கடைசியாக மேடையில் பாடிய பாடலை ரசிகர்கள் வீடியோ எடுத்து அதை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.. அத்துடன் கண்ணீருடன் இரங்கல் வாசகங்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.. மேலும், கேகே.வின் பாடல்களை பதிவிட்டு, தங்களது சோகத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்... மறைந்த கேகேவுக்கு பாடல்கள் என்றால் உயிர்.. சுவாசம் போன்றே பாடல்களையும் நேசித்தவர்.. அதனாலே என்னவோ, தன்னுடைய கடைசி மூச்சுவரை பாடிக் கொண்டே இருந்திருக்கிறார்.. அவர் பாடிய அத்தனை பாடல்கள், காற்றில் என்றென்றும் தவழ்ந்து கொண்டே இருக்கும் என்பது நிதர்சனம்..!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications