பல ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டது.. முக்கிய புள்ளிகள் எஸ்கேப்.. நீரவ் மோடி மோசடியில் திருப்பம்

நீரவ் மோடி மோசடி செய்ததற்கான பல ஆதாரங்கள், ஆவணங்கள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டது என்று சிபிஐ திடுக்கிடும் தகவலை தெரிவித்து இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீரவ் மோடி மோசடி செய்ததற்கான பல ஆதாரங்கள், ஆவணங்கள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டது என்று சிபிஐ திடுக்கிடும் தகவலை தெரிவித்து இருக்கிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.

இந்த வழக்கில் பலர் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். சிபிஐ சில முதற்கட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து இருக்கிறது.

18 பேர்

18 பேர்

தற்போது வரை 18 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்களும், நீரவ் மோடியின் நெருங்கிய நண்பர்களும் அடக்கம். இன்னும் பலர் கைது செய்யப்பட இருக்கிறார்கள். ஆக்சிஸ், ஐசிஐசிஐ வங்கியின் மேனேஜர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது.

கைப்பற்றியது

கைப்பற்றியது

இதுவரை மொத்தமாக 5,300 கோடி பணம் வரை பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இது எல்லாம் தங்கம், வைரம், சொத்து பாத்திரங்கள், கார்கள் ஆகிய வடிவங்களில் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோல் 6 சொகுசு பங்களாக்கள் சீல் வைக்கப்பட்டு இருக்கிறது.

ஆவணம்

ஆவணம்

இதில் இதுவரை கிடைத்த ஆவணம் எல்லாமே முதற்கட்ட ஆவணங்கள் மட்டுமே. இதை வைத்துதான் மூன்று எப்.ஐ.ஆர்கள் போடப்பட்டு இருக்கிறது. ஆனால் பெரிய அளவில் குற்றத்தை நிரூபிக்கும் முக்கிய ஆவணங்கள் கிடைக்கவில்லை.

அழிப்பு

அழிப்பு

இந்த பிரச்சனை பெரிதான சமயத்தில் எல்லா ஆவணங்களும் அழிக்கப்பட்டு இருக்கிறது. இதில் பல பெரிய தலைகளுக்கு தொடர்பு இருப்பதால் இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் நகல்கள் கிடைக்குமா என்று தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+