தங்கச்சின்னு கூட பார்க்கல.. எப்ப பார்த்தாலும் "அதுவே" குறியா இருந்தான்.. மகன் மீது தாய் பகீர் புகார்

சகோதரியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார் அண்ணன்

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: தனது மகளை தனது மகனே பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தாய் சொன்ன புகாரைக் கேட்டு போலீஸார் ஆடிப் போய் விட்டனர். கான்பூரில்தான் இந்த அக்கிரமம்.

பலமுறை தனது மகளை மகன் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், தான் தொடர்ந்து தடுத்து வந்ததாகவும், தற்போது அத்து மீறிப் போய் விட்டதாகவும் அந்த தாய் கண்ணீருடன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

mother accuses son in kanpur

இந்த புகாருக்குள்ளான அந்தப் பையனுக்கு 18 வயதுக்குள்தான் இருக்கும். அதைக் கேட்டு போலீஸார் மேலும் அதிர்ச்சி அடைந்து விட்டனர். கான்பூரில் உள்ள பாபுபூர்வா பகுதியைச் சேர்ந்தவர் அந்தப் பெண். அவருக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். சம்பவத்தன்று அவர் டிஐஜியை சந்தித்து ஒரு புகாரை கண்ணீர் மல்கக் கொடுத்தார்.

அதில், எனது மூன்றாவது மகனைப் பற்றி புகார் கூறத்தான் வந்தேன். அவன் தனது தங்கையிடம் அடிக்கடி தவறாக நடந்து வருகிறான். எனது மகள் எனது ஐந்து குழந்தைகளில் கடைசி மகள் ஆவார். அவளிடம் எப்பப் பார்த்தாலும் எனது மகன் அத்துமீறி நடந்து கொள்வான். அவள் பின்னாடியே சுற்றிச் சுற்றி வந்தான்.

பலமுறை எனது மகள் இருக்கும் அறைக்குள் புகுந்து அவளை பலாத்காரம் செய்ய முயல்வான். நான் புகுந்து தடுப்பேன். இதனால் கோபமடையும அவன் எங்கள் இருவரையும் அடிப்பான். எனது மாமனார், மாமியாரிடம் இதுகுறித்து நான் பலமுறை கூறியும் அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. என்னை ரொம்பத் தடுத்தால் இவளுக்கு கல்யாணம் ஆக விடாமல் தடுப்பேன், பிரச்சினை செய்வேன் என்றும் மிரட்டுவான் என்று கூறியுள்ளார் அந்தப் பெண்.

அதை விட இன்னொரு கொடுமையும் நடந்துள்ளது. அதாவது புகார் கொடுத்த பெண் திருமணத்திற்குப் பின்னர் தனது மாமனாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாராம். இதை எதிர்த்து அவர் குரல் கொடுத்தபோது வீட்டில் உள்ளவர்கள் அவரை மிரட்டி அடக்கி விட்டனராம். அந்தக் கொடுமையின் வடுவே போகாத நிலையில் தனது மகனும், சொந்த சகோதரியையே பலாத்காரம் செய்ய முயன்றதால் அதிர்ச்சி அடைந்து விட்டார் இந்தப் பெண்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+