2 ஆண்டுகள் கள்ளத்தொடர்பு, திருமணமான 2 வாரத்தில் விவாகரத்து கோரும் மாமியார், மருமகன்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் மாமியாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்து அவரையே திருமணம் செய்த மருமகன் விவகாரத்து கோரி விண்ணப்பித்துள்ளார்.

பீகார் மாநிலம் புர்னியா மாவட்டத்தை சேர்ந்தவர் சுராஜ் மேத்தா(22). அவர் மருவாகி கிராமத்தை சேர்ந்த சுரேந்திர மேத்தா, ஆஷா தேவியின் மகள் லலிதா குமாரியை கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான அடுத்த ஆண்டு லலிதா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

மருமகன்

மருமகன்

சுராஜ் விவசாய கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்நிலையில் அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடல் நலம் விசாரிக்க வந்த மாமியார் ஆஷா தேவி மருமகனுக்கு உதவி செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே கள்ளக் காதல் ஏற்பட்டது.

2 ஆண்டுகள்

2 ஆண்டுகள்

ஆஷாவின் கணவர் சுரேந்திரா டெல்லியில் வேலை செய்து வருவதால் அவர் வீட்டில் மற்றொரு மகள், மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் ஆஷாவுக்கும், சுராஜுக்கும் இடையே இரண்டு ஆண்டுகள் கள்ளத்தொடர்பு இருந்தது.

திருமணம்

திருமணம்

மாமியார், மருமகன் கள்ளத்தொடர்பு பற்றி அந்த கிராமத்திற்கே தெரியும். இந்நிலையில் அவர்கள் கடந்த ஜூன் மாதம் 6ம் தேதி முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இதை பார்த்து லலிதா குமாரி அதிர்ச்சி அடைந்தார்.

பாவம்

பாவம்

திருமணத்திற்கு பிறகு தாங்கள் செய்த தவறை உணர்ந்த அவர்கள் வீட்டை விட்டே வெளியே வரவில்லை. இந்நிலையில் கடந்த ஜூன் 23ம் தேதி அவர்கள் முறைப்படி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+