ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு ஓடிப் போயிருங்க.. பாகிஸ்தானுக்கு இந்தியா அதிரடி கடிதம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாகிஸ்தான் போய் விட வேண்டும். தீவிரவாதத்தை கைவிட வேண்டும். அப்படி செய்வதாக இருந்தால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா கடிதம் எழுதியுள்ளது.
பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தால் தீவிரவாதம், ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பேச முடியும் என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறைச் செயலாளர் இஜாஸ் செளத்ரிக்கு மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் எழுதியுள்ள கடிதத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று சமீபத்தில் செளத்ரி, ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதற்கு ஜெய்சங்கர் பதில் அனுப்பியுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்...
- தீவிரவாதம் மற்றும் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச இந்தியா தயார்.
- ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியிலிருந்து பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும்.
- பாகிஸ்தானுடன் பேசவதாக இருந்தால் இந்த இரு விவகாரம் மட்டுமே பேச்சில் இடம் பெறும்.
- பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு தெரிவித்து ஆதரவை கைவிட வேண்டும். தீவிரவாதத்தை தூண்டுவதை நிறுத்த வேண்டும்.
- காஷ்மீர் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக இல்லை.
- காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை.
- காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் வன்முறையைத் தூண்டி விடுகிறது.
- தீவிரவாதிகளை ஊடுறுவச் செய்தும், தீவிரவாதத்தை ஆதரித்தும் காஷ்மீர் பள்ளத்தாக்கை அமைதியிழக்கச் செய்கிறது பாகிஸ்தான்.
இவ்வாறு ஜெய்சங்கரின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications