போபால் என்கவுண்ட்டர் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது மபி அரசு!
அரசியல் கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் கொடுத்த நெருக்கடியால் தற்போது போபால் என்கவுண்ட்டர் தொடர்பாக நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது மத்திய பிரதேச அரசு.
போபால்: சிமி தீவிரவாதிகள் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக மத்திய பிரதேச அரசு நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
போபால் மத்திய சிறையில் இருந்து தப்பிய 8 சிமி தீவிரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக மபி அரசு தெரிவித்தது. ஆனால் இது போலி என்கவுண்ட்டர் என பலதரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தற்போது சிறையில் இருந்து தீவிரவாதிகள் தப்பியது குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்தி வருகிறது. இருப்பினும் 8 பேரை சுட்டுக் கொன்றது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றன.
இதையடுத்து போபால் என்கவுண்ட்டர் தொடர்பாக நீதிவிசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே. பாண்டே தலைமையில் இந்த நீதி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த என்கவுண்ட்டர் தொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications