மோடிக்கு திருமணமானதா யார் சொன்னது.. அவரு பேச்சுலர்ங்க.. ஆனந்திபென் புது தகவல்
மோடிக்கு திருமணமாகவில்லை என்ற மத்தியப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென்னின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

போபால்: குஜராத்தின் முன்னாள் முதல்வரும் மத்தியப் பி்ரதேச ஆளுநருமான ஆனந்தி பென், பிரதமர் மோடிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், ஹர்தா மாவட்டத்தில் உள்ள திமரி அங்கன்வாடி மையத்தில் நேற்று திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆனந்திபென் இந்தியில் பேசிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், "நரேந்திர மோடிக்கு திருமணமாகவில்லை. இருப்பினும் அவர் குழந்தைப்பேறு காலத்துக்கு முன்பான பெண்கள், மகப்பேறுக்கு பின்பான பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை புரிந்துகொண்டுள்ளார்." என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் ஆனந்திபென்னுடன் பாஜக எம்.எல்.ஏ. சஞ்சய் ஷாவும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.
2014 ஆம் ஆண்டு மோடி பிரதமரான பிறகு அவருடைய திருமணம் பற்றி பொதுவெளியில் அதிக அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் தேர்தல் பிரமானப்பத்திரத்தில், அவர் 1968 ஆம் ஆண்டு ஜஷோடாபென் என்பவரைத் திருமணம் செய்துகொண்டதைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஆளுநர் ஆனந்திபென் பிரதமர் மோடிக்கு திருமணம் ஆகவில்லை என்று குறிப்பிட்டுள்ளது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications