For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏர் இந்தியா விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டல் விடுத்த மாணவன் கைது

Google Oneindia Tamil News

தானே: மகாராஷ்டிராவில் உள்ள ஏர் இந்தியா வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு போன் செய்து விமானத்தைக் கடத்தப் போவதாக மிரட்டல் விடுத்த மத்திய பிரதேச மாணவனை போலீசார் கைது செய்தனர்.

மத்தியபிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்புப் படிக்கும் மாணவன் ஒருவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தானேவில் உள்ள ஏர் இந்தியா வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தொடர்பு கொண்டு, தான் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவன் என்றும், நவம்பர் 28-ம் தேதி ஏர் இந்தியா விமானத்தைக் கடத்தப்போவதாகவும் கூறி இணைப்பை துண்டித்தான்.

இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணையை துரிதப்படுத்தினர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள ஹர்தா மாவட்டத்திலிருந்து அந்த அழைப்பு வந்ததை கண்டுபிடித்தனர். அதையடுத்து அங்குள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்புப் படிக்கும் மாணவனை போலீசார் கைது செய்தனர். அந்த மாணவனிடம் இருந்த மூன்று சிம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், ‘ விளையாட்டுக்காக இதுபோன்ற மிரட்டல் விடுத்ததாக அவன் கூறியதையடுத்து, அவனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

English summary
A student from Madhya Pradesh has been arrested in connection a threat call made to Air India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X