இந்த 3 பேரும் எனக்குத் தேவையில்லை.. அதிர வைத்த டோணி... டிரெய்லர் சொல்லும் புதுக் கதை!
டெல்லி: டோணியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் MS Dhoni: The Untold Story பாலிவுட் படத்தின் டிரெய்லர் புயலைக் கிளப்பி வருகிறது. அதில் இடம் பெற்றுள்ள ஒரு வசனம்தான் இந்த பரபரப்புக்குக் காரணம்.
டோணி அதில், 3 முக்கியமான சீனியர் வீரர்களை அணியில் சேர்க்கக் கூடாது என்று தேர்வாளர்களிடம் சொல்வது போல ஒரு காட்சி வருகிறது. இதுதான் அந்த பரபரப்புக்கு முக்கியக் காரணம்.
நிஜத்திலும் கூட சில சீனியர் வீரர்களுக்கு எதிராக டோணி செயல்பட்டதாக ஒரு சலசலப்பு சில மாதங்களுக்கு முன்பு நிலவியது என்பது நினைவிருக்கலாம்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்
சுஷாந்த் சிங் ராஜ்புத் டோணி வேடத்தில் நடித்துள்ள படம்தான் MS Dhoni: The Untold Story. இப்படத்தின் டிரெய்லர் 11ம் தேதி வெளியானது.

ரசிகர்களிடம் வரவேற்பு
இந்த டிரெய்லருக்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் படத்தில் வரும் ஒரு காட்சி சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அமைதியானவர் - அடக்கமானவர்
டோணி என்றாலே அமைதியானவர், அடக்கமானவர், எளிமையானவர் என்றுதான் அனைவருக்கும் தெரியும். எவ்வளவு பதட்டத்திலும் கூட அவர் அமைதியாகத்தான் இருப்பார். ஆனால் இப்படத்தின் டிரெய்லரில் ஒருவர் பிடிவாதம் பிடிக்கும் ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது.

இவங்க எனக்கு வேணாம்
ஒரு காட்சியில் அணித் தேர்வு நடக்கிறது. வீடியோ கான்பரன்சிங் மூலமாக தேர்வாளர்கள் டோணியிடம் பேசிக் கொண்டுள்ளனர். அப்போது 3 சீனியர் வீரர்களைக குறிப்பிட்டு இவர்களை சேர்க்க வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறுகிறார் டோணி.

என்னப்பா சொல்றே
அப்போது ஒரு தேர்வாளர், இவரை அதிக அளவில் வளர்த்து விட்டவர்களையே இவர் நீக்கப் பார்க்கிறார். இவர் யாரையும் விட மாட்டார் போலத் தெரிகிறது என்கிறார். அதற்கு டோணி, நாம் அனைவரும் தேசத்திற்கான வேலைக்காரர்கள். தேசத்திற்கான கடமையில் ஈடுபட்டுள்ளோம். இவர்கள் எனது அணிக்குப் பொருத்தமானவர்கள் அல்ல. எனவே இவர்கள் வேண்டாம் என்று பதிலளிக்கிறார்.
நிஜமா.. இட்டுக் கட்டப்பட்டதா?
டோணி இப்படி நிஜத்திலும் கூறியுள்ளாரா அல்லது படத்திற்காக சேர்க்கப்பட்ட மசாலாவா என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் படம் பட்டாசாக பொறிந்து தள்ளும் என்பது மட்டும் உண்மை.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications