முகேஷ் அம்பானியின் வீடுதான் உலகின் மிக ஆடம்பரமான வீடு
மும்பை: உலகில் உள்ள கோடீஸ்வரர்களின் வீடுகளிலேயே மிகவும் ஆடம்பரமான வீடாக மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டை ஃபோபர்ஸ் பத்திரிகை தேர்வு செய்துள்ளது.
இதுகுறித்து ஃபோர்பஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மும்பையில் 4 லட்சம் சதுர அடியில் 27 மாடிகளைக் கொண்ட முகேஷ் அம்பானியின் "அன்டிலியா' வீடு தான் உலகில் உள்ள கோடீஸ்வரர்களின் வீடுகளிலேயே மிகவும் ஆடம்பர வீடாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

27 மாடி வீடு
'அன்டிலியா' என பெயரிடப்பட்டுள்ள இந்த வீடு தெற்கு மும்பையில் உள்ளது. இதன் மதிப்பு ரூ.5,350 கோடியாகும். 27 மாடிகளைக் கொண்ட இந்த வீடு 4,532 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஒரு சதுர மீட்டர் நிலத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் . இந்த வீட்டில், முழு நேர பணியாளர்களாக 600 பேர் பணிபுரிகின்றனர்.

உலக வர்த்தக மைய கட்டிடம்
நியூயார்க் நகரின் மான்ஹாட்டனில் ரூ. 200 கோடி மதிப்பில் 17 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்ட 7வது உலக வர்த்தக மையக் கட்டடத்துடன், முகேஷ் அம்பானியின் வீட்டை ஃபோபர்ஸ் பத்திரிகை ஒப்பிட்டுள்ளது.

3 ஹெலிகாப்டர்கள் நிறுத்துமிடம்
மேலும் இந்த வீட்டில் தரைத் தளத்தில் 6 அடுக்குகளைக் கொண்ட வாகன நிறுத்துமிடம் மற்றும் 3 ஹெலிகாப்டர்கள் நிறுத்துமிடம் ஆகியவை உள்ளன.

600 ஊழியர்கள்
இந்த வீட்டை பராமரிப்பதற்கு 600 ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள் என்று ஃபோபரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் தொழிலதிபர் வீடு
இதற்கு அடுத்ததாக பிரான்சில் உள்ள 'வில்லா லியோ போல்டா' என்ற கட்டடம், 2,709 கோடி ரூபாய் மதிப்புடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

லண்டன் வீடு
லண்டனில் உள்ள 'தி பென்ட் ஹவுஸ்' எனப்படும் கட்டடம் 1,070 கோடி ரூபாய் மதிப்புடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications