"அம்பானி வீட்டு திருமண விழா"ன்னா சும்மாவா.. 3 நாளில் செலவு மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா? அடேங்கப்பா!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா குஜராத்தின் ஜாம்நகரில் 3 நாட்கள் நடந்தது. இதற்காக மட்டும் முகேஷ் அம்பானி ரூபாய் 1,250 கோடி செல்வு செய்துள்ளாராம். திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியே இவ்வளவு பிரமாண்டமாக நடைபெற்றது என்றால் திருமணத்தை எப்படி நடத்த போகிறாரோ? என நெட்டிசன்கள் வியந்துள்ளனர்.

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும் இந்தியாவின் நெம்பர் 1 பணக்காரருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு வரும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது. என்கோர் நிறுவனத்தின் உரிமையாளர் விரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்டிற்கும் ஆனந்த் அம்பானிக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது.

Mukesh Ambani spend approximately 1260 crore for Anant Ambani Pre Wedding celebrations in Jamnagar

திருமணம் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில் திருமணத்திற்கு முந்தைய நாள் கொண்டாட்டங்கள் குஜராத்தின் ஜாம்நகரில் கடந்த 1 ஆம் தேதி முதல் நேற்று வரை என மொத்தம் 3 நாட்கள் நடைபெற்றது. ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானியின் தாய் கோகிலா பென்னின் சொந்த ஊர் ஜாம்நகர் என்பதால், செண்டிமண்டாகவும் இந்த ஊரில் தனது மகனின் திருமணத்திற்கு முந்தைய நாள் கொண்டாட்டத்தை நடத்தியிருக்கிறார் முகேஷ் அம்பானி.

அம்பானி வீட்டு திருமணம்: ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும் 3,000 ஏக்கரில் 'வந்தாரா' என்ற புதிய வனத்தையும் அம்பானி குழுமம் உருவாக்கி வைத்து உள்ளது. இந்த இடத்தில் தான், இங்குதான் அம்பானி வீட்டின் திருமண விழா நடைபெற்றது. அம்பானி வீட்டு திருமணம் என்பதால் உலக பெரும் கோடீஸ்வரர்களும் படையெடுக்க தொடங்கினர்.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக்,வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான மார்க் சூகர்பெர்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் என விவிவிஐபிக்கள் பலரும் பங்கேற்றனர். பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள், சச்சின், டோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் என பெரும் பட்டாளமே அம்பானி வீட்டு இல்ல நிகழ்வில் பங்கேற்றது.

3 வேளையும் உணவு வகைகள்: நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதா, மகள் ஜஸ்வர்யாவுடன் கலந்து கொண்டார். பிரபலங்கள் வருகை தர ஏதுவாக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு 10 நாட்கள் சர்வதேச அந்தஸ்தும் கொடுக்கப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் முதல் நாளில் அமெரிக்க பாப் பாடகியும் ரிஹானாவின் இசைக்கச்சேரி நடைபெற்றது.

2-வது நாளில், விருந்தினர்கள் அனைவரும் ஜாம்நகரில் உள்ள 3,000 ஏக்கர் வனத்தை சுற்றி பார்த்துள்ளனர். விருந்தினர்கள் தங்குவதற்கும் அங்கேயே நட்சத்திர விடுதிகளுக்கு இணையான வசதிகளுடன் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. மூன்று வேளையும் இந்திய உணவு வகைகளுடன் வெளிநாட்டு உணவு வகைகளும் பரிமாறப்பட்டுள்ளன.

வியந்து பார்க்கும் நெட்டிசன்ஸ்: சுமார் 2,500 வகையான உணவுகள் பரிமாறப்பட்டதாம். இதற்காக மட்டும் சுமார் 130 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார் அம்பானி. இந்தியா மட்டும் இன்றி சர்வதேச அளவில் அம்பானி இல்ல திருமண விழா வைரல் ஆனது. சமூக வலைத்தளங்களின் திருமண விழா குறித்த பதிவுகளும் புகைப்படங்களும் டிரெண்டிங்கில் இருந்தன.

ஜாம்நகரில் உற்சாகமாக நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சிக்காக மட்டும் முகேஷ் அம்பானி ரூபாய் 1,250 கோடி செல்வு செய்துள்ளாராம். திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியே இவ்வளவு பிரமாண்டமாக நடைபெற்றது என்றால் திருமணத்தை எப்படி நடத்த போகிறாரோ?.. என நெட்டிசன்கள் இப்போதே வியந்து பார்த்து வருகின்றனராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+