தலித்துகளைப் போல பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு- முலாயம் உறுதி
Subscribe to Oneindia Tamil
லக்னோ: சமாஜ்வாடி கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தால் தலித்துகளைப் போலவே பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு வழங்குவோம் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் உறுதியளித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முலாயம்சிங் பேசியதாவது:

மத்தியில் சமாஜ்வாடி கட்சி ஆட்சி அமைத்தால் சிறுபான்மையினர் நலன் காக்கும் சச்சார் கமிட்டி பரிந்துரைகளை நிச்சயம் செயல்படுத்துவோம்.
தலித்துகளுக்கு தனி இடஒதுக்கீடு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு தனியே இடஒதுக்கீடு கொண்டு வருவோம். இதன் மூலம்தான் அவர்களது வாழ்வாதாரம் மேம்படும்.
இவ்வாறு முலாயம்சிங் யாதவ் பேசினார்.












Click it and Unblock the Notifications