நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தை ஒழியுங்கள், இந்திய பிரபலப்படுத்துங்கள்... முலாயம்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் கூறுகையில், நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் யாரும் பேசுவதைத் தடை செய்ய வேண்டும்.
தாய்மொழியை பயன்படுத்திய நாடுகள்தான் உலகில் முன்னேறியுள்ளன. எனவே நமது நாடாளுமன்றத்தில் இந்தியை அறிமுகப்படுத்தி ஊக்குவி்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
இந்தி குறித்து நாட்டுத் தலைவர்கள் இரட்டை நிலையைக் கையாளுகின்றனர். இந்தியில் அவர்கள் மக்களிடம் ஓட்டு வேட்டையாடுகின்றனர். ஆனால் நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசுகின்றனர். இது நிறுத்தப்பட வேண்டும் என்றார் முலாயம் .
அத்தோடு நில்லாத முலாயம் சிங் யாதவ், நாட்டின் இதர பகுதிகளில் வாழ்வோர், தங்களது பிராந்திய மொழிகளுடன் சேர்த்து இந்தியையும் பிரபலப்படுத்த வேண்டும் என்றார் முலாயம்.












Click it and Unblock the Notifications