என்னை முலாயம்சிங் கொலை செய்யப் போகிறார் -பெனிபிரசாத் வர்மா
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பெனிபிரசாத் வர்மா, உத்தரபிரதேச கலவரம் விஷயத்தில் சமாஜ்வாடி கட்சியும், பாரதிய ஜனதாவும் கைகோர்த்து செயல்படுகின்றன. இதை காங்கிரஸ் தலைவர்கள் யாரும் வெளியில் சொல்ல அச்சப்படுகின்றனர்.
நான் மட்டும்தான் மிகவும் துணிச்சலாக இதை சொல்லி வருகிறேன். இதனால் முலாயம்சிங் யாதவ் என் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். எந்த நேரத்திலும் அவர் என்னை கொன்றுவிடும் திட்டத்தில் உள்ளார்.
டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி வரவேண்டும் என்று முலாயம்சிங் நினைக்கிறார். இதை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
அண்மையில் பிரதமர் வீட்டை சுத்தம் செய்யும் பணியை செய்யக் கூட முலாயம் தகுதி இல்லாதவர் என்று பெனிபிரசாத் வர்மா கிண்டல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications