லோக்சபா தேர்தலுக்கு முன்பே வேட்பாளர்களை அதிரடியாக மாற்றும் முலாயம்சிங் யாதவ்
லக்னோ: லோக்சபா தேர்தலுக்கு முன்பே தாம் அறிவித்த வேட்பாளர்கள் பலரையும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் மாற்றி வருகிறார்.
2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் எப்போது நடைபெறும் என்று அறிவிக்கப்படவில்லை. ஆனால் பல மாதங்களுக்கு முன்பே தமது கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை முலாயம்சிங் யாதவ் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டோரில் சிலர் பாரதிய ஜனதா கட்சியுடன் நெருக்கமாக இருந்து வருவதாக கட்சி மேலிடத்துக்கு தகவல்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக ஏற்கெனவே அறிவித்த வேட்பாளர்கள் பலரை மாற்றும் நடவடிக்கைகள் மும்முரமாகி வருகின்றன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சமாஜ்வாடி கட்சியின் உத்தரப்பிரதேச மாநில செய்தி தொடர்பாளர் ராஜேந்திர செளத்ரி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் 80 லோக்சபா தொகுதிகள் இருக்கின்றன. எங்களைப் பொறுத்தவரையில் யாரை நிறுத்தினால் வெற்றி உறுதியோ அவர்களையே வேட்பாளர்களாக அறிவிக்கிறோம்.
இப்படி வேட்பாளர்களை மாற்றுவது என்பது வழக்கமான ஒன்றுதான். இதனால் கட்சிக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications