மோட்டார் வாகன சட்டத்தை மீறிய 'அண்ணன்' கெஜ்ரிவால்... 'ஃபைன்' கட்டிய ஆட்டோ டிரைவர்!
மும்பை: மோட்டார் வாகனச் சட்டத்தை மீறி மூன்றுக்கும் அதிகமானவர்களை ஏற்றிச் சென்றதாக கெஜ்ரிவாலை ஏற்றி சென்ற ஆட்டோ டிரைவருக்கு மும்பை போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ளதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலம் மாநிலமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, மராட்டியத்தில் 3 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக நேற்று மும்பை வந்தார் கெஜ்ரிவால்.
விமான நிலையத்தில் இறங்கிய கெஜ்ரிவால் ஆட்டோ ஒன்றில் ஏறி 5 கிலோ மீட்டர் தூரமுள்ள அந்தேரி ரயில் நிலையத்துக்கு சென்றார். அப்போது அவருடன் ஆம் ஆத்மியைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் உடனிருந்தனர்.

மேலும் அவரை பின்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் ஆட்டோக்களில் சென்றனர். கெஜ்ரிவாலை ஏற்றிச் சென்றதன் மூலம் ஒரே நாளில் பிரபலமடைந்தார் அந்த ஆட்டோ டிரைவர். ஆனால், அவரது மகிழ்ச்சி நீண்ட நேரத்துக்கு நீடிக்கவில்லை.
கெஜ்ரிவாலின் ஆட்டோ பயணத்தைக் கேள்விப்பட்ட மும்பை போலீசார், மோட்டார் வாகன சட்டத்தை மீறி அந்த ஆட்டோவில் மூன்றுக்கும் அதிகமானோர் பயணம் செய்ததைக் கண்டு பிடித்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அந்த ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதித்தனர்.
இதுபற்றி மும்பை கூடுதல் போலீஸ் கமிஷனர் காலித் கூறுகையில், ‘‘அரவிந்த் கெஜ்ரிவாலை பின்தொடர்ந்து மோட்டார் வாகன சட்டத்தை மீறி சென்ற ஆட்டோ டிரைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவால் மின்சார ரயிலில் பயணம் செய்து இறங்கி சென்றபோது மெட்டல் டிடெக்டர் கருவி உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தன. இதனால் பொதுசொத்துகளுக்கு சேதம் விளைவித்தார்கள் என ஆம் ஆத்மி கட்சியினர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக மராட்டிய உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications