ராஞ்சியில் விமானம் மீது பறவை மோதல்... நல்ல வேளையாக விபத்து தவிர்ப்பு... பயணிகள் தப்பினர்!!
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து மும்பைக்கு வருவதற்கு புறப்பட்ட விமானத்தின் மீது பறவை மோதியதால் விமானம் புறப்படுவது தடை செய்யப்பட்டது. இதனால், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் உயிர் தப்பினர்.
கேரளாவில் நேற்று இரவு ஏற்பட்ட விமான விபத்தின் காயம் மறைவதற்கு முன்பு ராஞ்சியில் இன்று ஏற்படவிருந்த விமான விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது. ராஞ்சியில் இருந்து ஏர் ஏசியா விமானம் புறப்படுவதற்கு தயாரானது. அப்போது விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியது. உடனே விமானம் புறப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் நிகழவிருந்த ஆபத்து தடுக்கப்பட்டது. விமானத்தில் 176 பயணிகள் இருந்ததாகவும், அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. இதில் பதிவு ஆகி இருக்கும் வாய்ஸ் ரெக்கார்டு மூலம் எந்த மாதிரியான விபத்து நடந்தது என்பது விசாரணைக்கு பின்னர் தெரிய வரும்.

இதுபோன்று விமானம் தரையிறங்கும்போது, புறப்படும்போது விமானத்தின் மீது பறவைகள் மோதுவது சகஜம்தான் என்றாலும், விமானத்தின் மீது பறவை மோதுவதன் மூலம் விமானம் சேதம் அடையும் என்பதால் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளப்படும்.
துபாயில் இருந்து நேற்றிரவு கேரள மாநிலத்தில் இருக்கும் கோழிக்கோடு வந்த ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் தரையிறங்கும்போது கன மழை பெய்து வந்த காரணத்தினால், நிதானம் இழந்து இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. விமானம் இறங்கும்போது, வழுக்கி எதிரே இருந்த குழியில் விழுந்தது. இதில் விமானம் இரண்டாக உடைந்தது. 18 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications