2 முஸ்லீம் வாலிபர்களை அடித்து பாகிஸ்தானுக்கு செல்லுமாறு கூறிய மும்பை போலீஸ்
மும்பை: மும்பை பந்த்ரா காவல் நிலையத்தில் வைத்து போலீசார் இரண்டு முஸ்லீம் வாலிபர்களை தாக்கி அவர்களை பாகிஸ்தானுக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர்கள் ஆசிப் ஷேக்(19), தனிஷ் ஷேக்(19). அவர்கள் இருவரையும் இன்ஸ்பெக்டர் கேதர் பவார் உள்ளிட்ட போலீசார் கடந்த சனிக்கிழமை இரவு பந்த்ரா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அடித்து பாகிஸ்தானுக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ஏஜெண்டுகள் என்று கூறி அவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு பவார் தெரிவித்துள்ளார் என ஆசிபின் உறவினர் கூறியுள்ளார்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
சனிக்கிழமை இரவு 2.30 மணிக்கு அவர்களை பந்த்ரா பகுதியில் இருந்து அழைத்து வந்தோம். அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்ததால் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தோம். காவல் நிலையத்தில் ஆசிப் போலீசாரை திட்டியதுடன், தனக்கு அதிகாரம் மிக்க முஸ்லீம் அரசியல் தலைவர்களை தெரியும் என்றார்.
மேலும் அவர் இன்ஸ்பெக்டர் பவாரை மூன்று முறை குத்தினார். காவல் நிலையத்தில் இருந்த துப்பாக்கியை எடுக்கச் சென்றார். அவர்கள் இருவருக்கும் காயம் எப்படி ஏற்பட்டது என்பது விசாரணையில் தெரிய வரும் என்றார்.
இந்த சம்பவம் குறித்து ஆசிபின் உறவினர் உமர் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து துணை கமிஷனர் விசாரணையை துவங்கியுள்ளார் என மும்பை போலீஸ் கமிஷனர் அகமது ஜாவித் தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications