மும்பை பத்திரிக்கையாளர் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான நால்வரும் குற்றவாளிகள் - மும்பை கோர்ட்
மும்பை: 22 வயதான பெண் பத்திரிக்கை புகைப்பட நிபுணரை மும்பை சக்தி மில் பகுதியில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய நான்கு வன்முறையாளர்களும் குற்றவாளிகள் என்று மும்பை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
மத்திய மும்பை பகுதியில் சக்தி மில்ஸ் உள்ளது. பாழடைந்து கிடக்கும் இந்த ஆலைப் பகுதியில் பெண் புகைப்பட நிருபர் ஒருவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 22 ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
5 பேர் கொண்ட கும்பல் அவரை பாலியல் பலாத்காரம் செய்தது. அதோடு அவரது காதலரையும் அந்த கும்பல் தாக்கியது. இந்த வழக்கில்தான் நான்கு பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு பேரும், அதற்கு முன்பு அதாவது கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதே ஆலைப் பகுதியில் 18 வயது டெலிபோன் ஆபரேட்டரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கிலும் தொடர்புடையவர்கள் ஆவர்.
இந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பெண் புகைப்பட நிருபர் வழக்கில் விஜய் ஜாதவ், சலீம் அன்சாரி, காசிம் பெங்காலி, முகமது ஷேக் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 5 ஆவது நபரான சிராஜ்ரகுமான் சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சிறார் நீதிமன்றத்தில் இவன் விசாரிக்கப்படுகிறான்.
நான்கு பேர் மீதும் பாலியல் வன்கொடுமை, குற்றம், பொதுப்பிரிவு,இயற்கைக்கு மாறான பாலியல் கொடுமை ஆகிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட பெண் நிருபர் மிகவும் மன உறுதி படைத்தவர்.அவரே முன் வந்து தன்மேல் பாலியல் வன்முறை மேற்கொண்டவர்களைப் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு அளித்தார். மேலும் அவருடைய தகவல்களால்தான் போலீசார் அந்த குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை ஜெயில்கம்பிகளுக்கு பின்னால் தள்ள முடிந்தது.
இந்த பாலியல் வழக்கில் காவல்துறை மொத்தமாக 5 பேரை கைது செய்தது.அதன்பின், 28 நாட்களுக்கு பிறகு காவல்துறை 600 பகுதிகளைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.அதில் 41 சாட்சிகளின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது.கடந்த 7 மாதங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் 4 பேர் வழக்கமான நீதிமுறைகளின்படி கைது செய்யப்பட்டனர்.5ஆவது நபர் மட்டும் ஜுவனைல் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த 4 பேரும் வேலை இல்லாதவர்கள். அருகே உள்ள குடிசை பகுதியில் வசிப்பவர்கள். இவர்களுக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படும். அனே்கமாக நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications