கடற்படை கப்பலில் மீண்டும் தீ விபத்து: 3 பேர் காயம்!
மும்பை: கடற்படைக்கு சொந்தமான கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் மாலுமி உள்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
மும்பை கடலில், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எல். கங்கா கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த கப்பலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் கப்பலில் இருந்த மாலுமிகள் உள்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த கடற்படை உத்தரவிட்டுள்ளது.
கடந்த பத்து மாதத்தில் ஏற்பட்ட கடற்படை கப்பல்களில் 15 வது விபத்தாகும்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பை கடற்படை தளம் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ் சிந்து ராக்ஸாக் நீர் மூழ்கி கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 18 வீரர்கள் உயிரிழந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி ஐ.என்.எஸ் சிந்துரத்னா நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் டி.கே.ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதன்பின் ஐ.என்.எஸ் கொல்கத்தா என்ற போர்க்கப்பலில், தீயணைப்பு கருவியில் ஏற்பட்ட பழுது காரணமாக கமாண்டர் ஒருவர் பலியானார். கடந்த 10 மாதங்களில் கடற்படை கப்பல்கள் சந்தித்த 15வது விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications