மும்பை பலாத்கார வழக்கு: தன்னை சீரழித்தவர்களை அடிக்க விரும்பிய பாதிக்கப்பட்ட பெண்
மும்பை: மும்பை சக்தி மில்ஸ் வளாகத்தில் 5 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 18 வயது பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி அழுது கொண்டே தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்தார். மேலும் தன்னை அடித்த குற்றவாளிகளை தானும் அடிக்க வேண்டும் என்றார்.
மும்பை சக்தி மில்ஸ் வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி பெண் பத்திரிக்கையாளர் மைனர் உள்பட 5 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து அந்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நடந்த பிறகு 18 வயது டெலிபோன் ஆபரேட்டர் பெண் ஒருவர் 5 பேர் தன்னையும் அதே சக்தி மில்ஸ் வளாகத்தில் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்தார். தான் தனது நண்பருடன் அந்த வளாகத்திற்கு சென்றபோது அந்த 5 பேரும் தனது நண்பரை கட்டிப்போட்டு விட்டு தன்னை பலாத்காரம் செய்ததாகக் கூறினார். அந்த 5 பேரில் 3 பேர் பெண் பத்திரிக்கையாளரை பலாத்காரம் செய்தவர்கள் ஆவர்.
இந்நிலையில் அந்த டெலிபோன் ஆபரேட்டர் பெண் நேற்று மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் தனது தாயுடன் ஆஜராகினார். நீதிமன்றத்தில் அந்த பெண், 5 குற்றவாளிகள், அவர்களுடைய வழக்கறிஞர்கள் மற்றும் பெண் நீதிபதி மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் இருந்தனர்.
அப்போது அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அழுதபடியே தெரிவித்தார். மேலும் தன்னை சீரழித்து தாக்கியவர்களை பதிலுக்கு தானும் அடிக்க விரும்புவதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை நீதிபதி சமாதானம் செய்து வைத்தார்.












Click it and Unblock the Notifications