டிரீட் கொடுக்க அழைத்து சென்று கொலை செய்த நண்பர்கள்.. மும்பை போலீஸை அதிர வைத்த கொலை
மயூரா என்ற நபரை உணவு சாப்பிட கூப்பிட்டு தந்திரமாக அவரது நண்பர்களே கொலை செய்த சம்பவம் மும்பையில் அரங்கேறி இருக்கிறது.
மும்பை: மயூரா என்ற நபர் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இவர் அவரது நெருங்கிய நண்பர்களால் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த கொலை செயலில் ஈடுபட்ட நண்பர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் தனித்தனியாக போலீசில் தங்களது வாக்குமூலத்தை அளித்து இருக்கின்றனர்.
டிரீட் ஒன்றிருக்காக உணவு வாங்கி கொடுப்பதாக கூறி நண்பரை கொலை அழைத்து சென்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் போலீஸ் வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்திருக்கிறது.

போலீசில் புகார்
மும்பையில் இருக்கும் 'கொல்சேவாதி' போலீஸ் நிலையத்தில் கடந்த வாரம் 'மாயூர் டோலஸ்' என்ற 21 வயது இளைஞன் காணவில்லை என்று அவனது பெற்றோரால் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் போலீசார் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் திணறி இருக்கின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு நெடுஞ்சாலை ஓரத்தில் அந்த இளைஞனின் உடலை கண்டுபிடித்தனர்.

மாட்டிக் கொண்ட நண்பர்கள்
இந்த கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர் கடைசியாக கால் செய்து இருந்த பெண் தோழியிடம் விசாரணை செய்தனர். அந்த பெண், மாயூர் அவர் நண்பர்களுடன் சாப்பிட செல்வதாக கூறியதை வாக்குமூலமாக அளித்து இருக்கிறார். இந்த நிலையில் போலீசார் அவரது நண்பர்களான கோகுல், பிரமோத் என்ற இருவரிடமும் விசாரணை செய்தனர்.

பலே திட்டம்
முதலில் கோகுல் தான் செய்த கொலையை ஒப்புக் கொள்ளாமல் இருந்திருக்கிறார். ஆனால் பிரமோத் போலீசாரை பார்த்தவுடன் அனைத்து உண்மைகளையும் கூறியிருக்கிறார். மேலும் டிரிட்டிற்கு சாப்பாடு வாங்கி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். மாயூர் சாப்பாட்டில் விஷம் கலந்து கொலை செய்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

பணத்திற்காக செய்த கொலை
கொலையை செய்துவிட்டு உடலை பைக்கில் 6 கிலோ மீட்டர் எடுத்து சென்று இருக்கின்றனர். இந்த கொலையை 25 லட்சம் பணத்திற்காக செய்து இருக்கின்றனர். ஆனால் கொலை செய்த பின் பயமாக இருந்ததால் மயூராவின் குடும்பத்திடம் பணம் கேட்கவில்லை என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்கள் இருவரும் கொல்லப்பட்ட மாயூராவின் பக்கத்து வீட்டிலேயே வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications