சமயோஜித ஐடியாவால் தாயைப் பலாத்காரத்திலிருந்து காப்பாற்றிய 4 வயது சிறுமி
மும்பை: மும்பையில் நான்கு வயது சிறுமி தனது சமயோஜித நடவடிக்கை மூலம் தனது தாயை பலாத்காரத்திலிருந்து காப்பாற்றி போலீஸ் மற்றும் அக்கம்பக்கத்தாரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
மும்பையில் கடந்த திங்களன்று காலை 7 மணி அளவில் ஜெய்பால் என்ற 29 வயது வாலிபர் ஒருவர் வீடொன்றில் நுழைந்து கத்தி முனையில் அங்கிருந்த பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். அப்பெண்ணின் கணவர் டீக்கடைக்கு சென்றிருப்பதை நோட்டமிட்டு ஜெயபால் அந்த வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
தன்னுடைய நான்கு மற்றும் ஒரு வயது குழந்தைகளின் முன்னால் கயவன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததால் அதிர்ச்சியடைந்த அப்பெண், தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள போராடியுள்ளார். தன்னை விட்டு விடுமாறு அவர் கோரியும் கூட அந்த மிருகம் விடவில்லை. குழந்தைகள் கண் முன்பாக அக்கிரமம் செய்கிறோமே என்பதையும் அந்த நபர் உணரவில்லை.
இதற்கிடையே தாயின் அலறலைக் கேட்டு கண் விழித்த அவரது நான்கு வயது மகள், தொடர்ந்து தூங்குவதைப் போல் நடித்துள்ளார். தக்க சமயத்தில் வீட்டிலிருந்து வெளியேறி அக்கம்பக்கத்தாரிடம் தங்கள் வீட்டில் திருடன் புகுந்திருப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர், ஜெய்பாலிடம் சிக்கி கற்பைக் காக்க போராடி வந்த சிறுமியின் தாயாரை பத்திரமாக மீட்டனர். பின்னர் ஜெயபாலைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் ஜெய்பால் மீது ஏற்கனவே இது போன்ற பாலியல் புகார்கள் பதிவு செய்யப் பட்டிருந்தது தெரியவந்தது. அந்தப் பகுதி பெண்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இவன் இருந்து வந்துள்ளான். எப்போதும் பையில் கத்தியுடன் சுற்றி வரும் ஜெய்பால், ஆண்கள் வெளியில் சென்றிருக்கும் வீடுகளாக நோட்டமிட்டு அவ்வீட்டில் உள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
நான்கு வயது சிறுமி சாமர்த்தியமாக செயல்பட்டதால் அவரது தாயார் பாலியல் பலாத்காரத்திலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். அதோடு பல நாள் தேடப்பட்டு வந்த குற்றவாளியும் தற்போது போலீசில் சிக்கியுள்ளான். ஆனால் தான் கைதானது குறித்து ஜெய்பால் வருத்தமே படவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். அவன் மீண்டும் வெளியே வந்தால் கண்டிப்பாக மறுபடியும் அக்கிரமங்களைத் தொடர்வான் என்றும் அவர்கள் பீதியுடன் உள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications