Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வடாலாவுக்க் வந்த 'காலா' ரஜினி - ஸ்டைலைப் பார்த்து அதகளப்படுத்தும் ரசிகர்களின் வைரல் வீடியோ

படப்பிடிப்பிற்காக மும்பையின் வடாலா பகுதிக்கு வந்த நடிகர் ரஜினிகாந்திற்கு அந்தப் பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்த வீடியோ வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

மும்பை: காலா படப்பிடிப்பிற்காக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வந்த தாதா ரஜினியை பார்த்து மக்கள் விசிலடித்து வரவேற்கும் பிரத்யேக காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.

நடிகர் ரஜினிகாந்தின் 164வது படமான காலா ஷூட்டிங் மே 28 முதல் மும்பையில் தொடங்கியுள்ளது. கபாலி பட இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கும் இந்த படத்தின் தலைப்பில் தொடங்கி, கதைக்களம் வரை ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உள்ளன.

 Mumbai's wadala welcomes Rajinikanth with big applause and whistle blowers

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வேஷ்டியுடன் இருக்கும் ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்தே இதுவும் டான் கதை தான் என்று ரசிகர்கள் சிலாகிக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் இது எந்த டான் கதையைத் தழுவியது என்பதில் தான் விஷயமே இருக்கிறது என்று காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

படப்பிடிப்பின் முதல் நாளில் ரஜினிகாந்த் நெல்லை பாஷையில் வசனங்கள் பேசிய ஆடியோ வெளியானதால் இது நெல்லையில் இருந்து மும்பை சென்ற ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த டானின் கதை என்று கூறப்படுகிறது. இந்தத் தகவல் வெளியான அடுத்த நெடியே அந்த சமூகத்தினர் தலைவா உனக்கு சாதி, மதம் எதுவும் இல்லை, நீ அரசியலுக்கு வா என்று போஸ்டர் ஒட்டி அதகளப்படுத்தியது தனிக் கதை.

தாராவி மற்றும் அதன் சுற்றியுள்ள மும்பைத் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பட ஷூட்டிங் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இரண்டாவது நாள் ஷூட்டிங்கிற்காக மும்பையில் வடாலா பகுதிக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று வந்தார். அவரைக் காண்பதற்காக அந்தப் பகுதி மும்பை வாசிகள் கூடியிருந்தனர். ரஜினி காரில் இருந்து இறங்கியது முதல் கைகாட்டி விசிலடித்த மும்பை வாசிகள், அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் இன்று வெள்ளை சட்டையுடன் ஷூட்டிங் ஸ்பாட் வந்த ரஜினி திரண்டிருந்த மக்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டு சென்றார். யூடியூப்பில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோ வைரல் வீடியோவாக மாறி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+