மும்பை ரயில் நிலையத்தில் தூங்கிய 5, 7 வயது சகோதரிகள் பலாத்காரம்: 2 வாலிபர்கள் கைது
மும்பை: ரயில் நிலையத்தில் தங்கியிருந்த 5 மற்றும் 7 வயது சகோதரிகள் இருவரை தொடர்ந்து மூன்று நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்து வந்த இரண்டு வாலிபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை பாந்துப் ரயில்வே நிலையம் அருகே சாலை அமைக்கும் பணிக்கு இடம் கையகப்படுத்தபட்டதால் வீட்டை இழந்த குடும்பம் ஒன்று தங்கள் சொந்த ஊரான ரத்தினகிரிக்கு செல்லும் பொருட்டு ரயில்வே நிலையத்தில் தங்கி இருந்ததாகச் சொல்லப் படுகிறது.
அக்குடும்பத்தில் ஐந்து மற்றும் ஏழு வயதில் இரண்டு சிறுமிகள் இருந்துள்ளனர். இவர்களில் 5 வயது சிறுமிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவையடுத்து அவர் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். அங்கு அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக இது தொடர்பாக குர்லா ரயில்வே போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமிகள் இருவரையும் அந்த பகுதியில் சுற்றி திரிந்த 19 மற்றும் 21 வயது உடைய 2 வாலிபர்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
மேலும், பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிகளை அதிகாலை 4 மணியளவில் தூக்கிச் சென்று கடந்த மூன்று நாட்களாக வாலிபர்கள் ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக குற்றவாளிகளை வளைத்துப் பிடித்த போலீசார் அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 376, 363, மற்றும் 34 கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications