மாணவிகளை மிரட்டி ஆபாச வீடியோ பார்க்க வைத்த பள்ளி ஆசிரியர் கைது
மும்பை: மும்பையில் மாணவிகளை ஆபாச வீடியோக்களை பார்க்க வைத்த தனியார் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் சுலைமான் ஷேக்(35). அவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டியுள்ளார். ஆபாச படத்தை பார்க்க மறுப்பவர்களை தேர்வில் ஃபெயிலாக்கிவிடுவேன் என்று மிரட்டி மிரட்டியே மாணவிகளை ஆபாச வீடியோ பார்க்க வைத்துள்ளார்.

ஆசிரியருக்கு பயந்து மாணவிகள் பள்ளியில் நடப்பதை வெளியே கூறாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் ஒரு மாணவி சுலைமானின் கேவலமான செயல் பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் இது குறித்து புதன்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுலைமானை கைது செய்தனர். சுலைமான் கடந்த 5 ஆண்டுகளாக அந்த பள்ளியில் தான் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியரின் இந்த செயல் மாணவ, மாணவியரின் பெற்றோரை கோபமும், அதிர்ச்சியும் அடைய வைத்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications