நடுரோட்டில் இளைஞனை வெட்டி சாய்த்த கொடூரம் - காட்டிக் கொடுத்த சிசிடிவி
விசாகப்பட்டினம்: நடுரோட்டில் போதையில் விழுந்து கிடந்த நபரை இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் கத்தியால் குத்தி கிழித்து கொலை செய்துள்ளார். கள்ளக்காதல் பிரச்சினையில் இந்த கொலை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மனைவியின் கள்ளக்காதலனை கொன்று விட்டு உடனடியாக தனது மனைவியை கொலை செய்ய முயன்ற போது அந்த நபர் போலீசில் பிடிபட்டுள்ளார்.
விசாகப்பட்டினம் சோடவரம் பகுதியில் நடுரோட்டில் போதையில் கிடந்த நபரை இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தனது கையில் இருந்த கத்தியால் வெட்டிக்கொன்றார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்யப்பட்ட அந்த நபர் யார்? கொலை செய்தவர் யார் எதற்காக இந்த கொலை நடந்தது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகே இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்ததில் கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் ராஜேஸ் என்று தெரியவந்தது. கொலை செய்த நபர் ஹெல்மெல் அணிந்து வந்ததால் முகம் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அதே நேரத்தில் கேமராவில் பதிவான மோட்டார்பைக்கின் நம்பரை வைத்து அது சாத்திபாபு என்பவருக்கு சொந்தமானது என்று கண்டுபிடித்தனர்.
சாத்திபாபுவின் வீட்டிற்கு போலீசார் சென்ற போது அங்கே தனது மனைவியை அவர் கொலை செய்த முயற்சி செய்தது தெரியவந்தது. சாத்திபாபு தனது மனைவியை கொலை செய்ய முயன்றது ஏன் என்று விசாரித்தனர். தனது மனைவிக்கும் கொலை செய்யப்பட்ட ராஜேசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். போலீஸ் விசாரணையில் தான் கொலை செய்ததை சாத்திபாபு ஒப்புக்கொண்டுள்ளார்.
கள்ளக்காதலால் கொலைகளும் தற்கொலைகளும் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. ஆண் பெண் இருவரின் கள்ளத்தொடர்பால் இரண்டு குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன என்பதை உணர்வதில்லை. இதன்காரணமாகவே கள்ளக்காதல்கள் அதிகரித்து வருகின்றன. கணவனை மனைவியும், மனைவியை கணவனும் ஏமாற்றுவது அதிகரித்து வருகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications