For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கைகோர்த்த இந்து - முஸ்லிம்கள்.. பதானுக்கு அடி மேல் அடி! இருமுனைத் தாக்குதலில் சிக்கிய ஷாரூக் கான்

Google Oneindia Tamil News

போபால்: நடிகர் ஷாரூக் கான் நடித்து இருக்கும் பதான் திரைப்படத்துக்கு பாஜக, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இஸ்லாமிய அமைப்புகளும் அந்த படத்திற்கு தடைகோரி இருக்கின்றன.

பிரபல இந்தி நடிகர் ஷாரூக் கான் நடித்து இருக்கும் திரைப்படம் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கி இருக்கும் இப்படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடித்து உள்ளார். விஷால் - சேகர் இசையமைத்து இருக்கிறார்கள்.

வரும் ஜனவரி 25 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்டர்கள் கடந்த சில வாரங்கள் முன்பாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஆணவக் கொலைகள்.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வேதனை ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஆணவக் கொலைகள்.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வேதனை

நட்சத்திர பட்டாளம்

நட்சத்திர பட்டாளம்

ஷாரூக் கான் மட்டுமின்றி இந்த படத்தில் பிரபல நடிகர் ஜான் ஆப்ரஹாம், அசுதோஷ் ரானா, கௌதம் ரோட் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். பிரபல பாலிவுட் நடிகர்களான சல்மான் கான் மற்றும் ரித்திக் ரோஷன் ஆகியோர் பதான் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தை பிரபலப்படுத்துவதற்கான விளம்பர பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

சர்ச்சையை ஏற்படுத்திய பாடல்

சர்ச்சையை ஏற்படுத்திய பாடல்

கடந்த 12 ஆம் ஆம் தேதி "பேஷாராம் ராங்" என்ற இந்த திரைப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டது. "அழகிய மழை" என்ற பெயரில் வெளியான இதன் தமிழ் பாடலுக்கு பிரபல் பாடலாசிரியர் மதன் கார்கி வரிகளை எழுதி உள்ளார். இதில் ஷாரூக் கான், தீபிகா படுகோனே நடனமாடும் காட்சி கடந்த சில நாட்களாக பெரும் எதிர்ப்பலையை படத்தில் கிளப்பி உள்ளது.

காவியில் தீபிகா நடனம்

காவியில் தீபிகா நடனம்

இதில் காவி நிறத்திலான உடையை அணிந்து தீபிகா படுகோனே நடனமாடி உள்ளதற்கு இந்துத்துவா அமைப்பினரும் பாஜகவினரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். பதான் திரைப்படம் ஓடும் திரையரங்குகளையும் படக்குழுவையும் தீ வைத்து கொளுத்துங்கள் என அயோத்தி ஹனுமன் கார் மடத்தின் மத குரு ராஜு தாஸ் தெரிவித்தார்.

இஸ்லாமிய அமைப்பு எதிர்ப்பு

இஸ்லாமிய அமைப்பு எதிர்ப்பு

மத்திய பிரதே மாநில உள்துறை அமைச்சரும் இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய பிரதேச மாநில உலமா வாரியமும் எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் சையது அனஸ் அலி தெரிவிக்கையில், "இப்படம் இஸ்லாத்தை தவறாக சித்தரித்து இருப்பதாக பல்வேறு தகவல்கள் வருகின்றனர்.

புறக்கணிக்க அழைப்பு

புறக்கணிக்க அழைப்பு

இது தொடர்பாக எங்களுக்கு பல்வேறு அழைப்புகள் வந்தகொண்டே இருக்கின்றன. அனைத்து இந்திய இஸ்லாமிய திருவிழா கமிட்டியும் இந்த படத்தை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது. பொதுமக்கள், ராணுவ வீரர்கள், அரசு ஊழியர்கள் இந்த திரைப்படத்தை பார்க்கக்கூடாது என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். திரையரங்குகள் இப்படத்தை திரையிடக்கூடாது.

அமைதியை கெடுக்கும் படம்

அமைதியை கெடுக்கும் படம்

எங்களின் இந்த நிலைபாட்டை அனைத்து இந்திய உலமா சபையும் ஏற்று உள்ளது. இஸ்லாம் குறித்து யாராவது தவறாக பேசினால் அதை எதிர்ப்பது எங்கள் உரிமை. நாங்கள் அதில் சமரசம் செய்ய மாட்டோம். எங்கள் மதம் குறித்த சிறப்புகளை நாங்கள் பேசுவோம். நாட்டின் அமைதியை குலைக்கும் இந்த படத்தை தணிக்கை வாரியம் அனுமதிக்கக்கூடாது. முஸ்லிம்கள் உணர்வுகள் இதனால் காயப்படும். " என்றார்.

English summary
While BJP and Hindu organizations are protesting against Shah Rukh Khan starrer Pathan, Islamic organizations are also demanding a ban on the film.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X