நான் அறிவியல் மாணவன்தான்... ஆனால் எனது மூதாதையர்கள் குரங்குகள் அல்ல... மத்திய அமைச்சர் பேச்சு
நான் அறிவியல் மாணவன்தான் என்கிற போதிலும் எனது மூதாதையர்கள் குரங்குகள் அல்ல என்று மத்திய அமைச்சர் சத்யபால் சிங் பேசியுள்ளார்.
டெல்லி: நான் அறிவியல் படித்த மாணவர்தான் ஆனால் எனது மூதாதையர்கள் குரங்குகளாக இருந்தனர் என்பதை நான் ஏற்க மாட்டேன் என்று மத்திய அமைச்சர் சத்யபால் சிங் கூறியுள்ளார்.
குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பது டார்வினின் கோட்பாடு ஆகும். இதை அனைவரும் பள்ளி பாடப்புத்தகங்களில் படித்துள்ளோம். இந்த கோட்பாடு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு நம்பப்படுகிறது.

மனிதனுக்கு இருக்கும் அதே உணர்ச்சிகள் குரங்கிற்கும் இருக்கும் என்று கருதப்படுகிறது. நாம் பேசுகிறோம், குரங்குகளால் பேச முடியாது என்ற வித்தியாசத்தை தவிர்த்து வேறொன்றும் இல்லை என்பது அறிஞர்களின் வாதம்.
கடந்த சில மாதங்களுக்கு முன் டார்வின் கோட்பாடு அறிவியல் ரீதியாகவே தவறு என்றார் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சத்யபால் சிங். எனவே பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்திலும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். இதற்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் சத்யபால் சிங் கூறுகையில் நான் அறிவியல் மாணவன். வேதியியலில் பிஎச்டி பட்டம் பெற்றுள்ளேன்.
எனது மூதாதையர்கள் குரங்குகள் அல்ல. எனது கருத்துக்கு கண்டனம் தெரிவிப்பது சரியல்ல. இது என்னுடைய அபிப்ராயம். என்னுடைய கருத்தால் எத்தனை பேர் எனக்கு எதிராக உள்ளீர்கள், எத்தனை பேர் எனது கருத்தால் விழித்துக் கொண்டீர்கள்? இன்றோ நாளையோ இல்லாவிட்டால் 10 முதல் 20 ஆண்டுகளுக்குள்ளோ இதை மக்கள் ஏற்றுக் கொள்வர் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications