ராகுல் யாத்திரையோடு என் இன்னிங்ஸ் முடிந்தது.. அரசியல் ஓய்வை அறிவித்த சோனியா காந்தி? கலங்கும் கதர்கள்
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையுடன் எனது இன்னிங்ஸ் முடிந்துவிட்டது என சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
ராய்பூர்: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையுடன் எனது இன்னிங்ஸ் முடிவதால் மகிழ்ச்சி என்று சத்தீஸ்கரில் நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85 வது அகில இந்திய மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேசி இருப்பதன் மூலம் அவர் அரசியலில் இருந்து ஓய்வை அறிவித்து உள்ளாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85 வது அகில இந்திய மாநாடு நடைபெற்று வருகிறது. 24 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், காரிய கமிட்டி உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு இருக்கிறார்கள்.
இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையுடன் எனது இன்னிங்ஸ் முடிந்துவிட்டது என்று பேசியது அங்கிருந்த கட்சி நிர்வாகிகளை கலங்க வைத்து உள்ளது.

இன்னிங்ஸ் முடிகிறது
அவர் தனது உரையில், "நாங்கள் 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் உரிய தலைமையுடன் வெற்றிபெற்றோம். மன்மோகன் சிங் தனது ஆட்சியின் மூலமாக எனக்கு முழு திருப்தியை கொடுத்தார். ஆனால், காங்கிரஸுக்கு திருப்புமுனையாக அமைந்த பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையுடன் எனது இன்னிங்ஸ் முடியும் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

வெறுப்பு நெருப்பில் எண்ணெய் ஊற்றும் பாஜக
இது காங்கிரஸ் மற்றும் முழு நாட்டு மக்களுக்கும் சவாலான நேரம். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக ஒவ்வொரு நிறுவனங்களையும் கைப்பற்றி வருகிறார்கள். வெறுப்பு என்னும் நெருப்புக்கு எண்ணெய் ஊற்றி வருகிறது பாஜக. சிறுபான்மையின மக்கள், தலித்துகள், பழங்குடியின மக்கள், பெண்களை பாரதிய ஜனதா கட்சி குறி வைத்து வருகிறது.

வீரியத்துடன் பாஜகவை எதிர்கொள்ள வேண்டும்
நாம் பாஜக ஆட்சியை வீரியத்தோடு எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மக்களையும் சந்தித்து நமது செய்தியை தெளிவாக கூற வேண்டும்." என்று தெரிவித்தார். சோனியா காந்தி கடந்த 1998 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக பதவியேற்றபோது மத்திய பிரதேசம், ஒடிசா, மிசோரம் ஆகிய 3 மாநிலங்களில் அக்கட்சி ஆட்சியில் இருந்தது.

மல்லிகார்ஜுன கார்கே பேச்சு
தற்போதும் அக்கட்சி ராஜஸ்தான், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. சோனியாவை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "காங்கிரஸ் கட்சி பாஜகவை வீழ்த்தி ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு உள்ளது. எத்தகைய தியாகத்தை செய்ய நாம் தயாராக இருக்கிறோம்.

பாஜகவின் சதி
நாட்டின் ஜனநாயகத்தை குலைக்க பாஜக சதி செய்து வருவதாக தெரிகிறது. ஆனால், காங்கிரஸ் இந்தியாவை ஒற்றுமையாக்க முயற்சித்து வருகிறது. ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்ட ராகுல் காந்திக்கும், 22 ஆண்டுகளாக கட்சியை தலைமையேற்று வழிநடத்திய சோனியா காந்திக்கும் நன்றி. பணவீக்கத்தை கட்டுப்படுத்த சிறுகுறு நிறுவனங்கள் மூலம் ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டு உள்ளோம்.

ஓட்டின் மூலம் ஆட்சிமாற்றம்
ஏழை, பணக்காரர் இடையிலான இடைவெளிக்கு இடையே பாலத்தை அமைக்க உள்ளோம். விவசாயிகள் தங்களின் விளை பொருட்களுக்கு உரிய விலையை பெறுவார்கள். டெல்லியில் இருப்பவர்களின் டி.என்.ஏவே ஏழைகளுக்கு எதிரானதும் அவர்களையும் தாக்குவதும்தான். மக்களின் வாக்குகளின் மூலமாக அரசுகளை மாற்றுவதே எங்கள் முயற்சி. பண மூட்டைகள், சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மூலமாக ஆட்சியை மாற்ற நினைக்கவில்லை." என்று தெரிவித்தார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
கிளைமேட்டே டக்னு மாறிடுச்சே.. சோனியா, அமித் ஷா யாரையுமே விஜய் சந்திக்கல.. இதுதான் விஷயமா? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல்












Click it and Unblock the Notifications