தீவிரவாத தாக்குதல் நடந்த பஞ்சாபில் பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் கைது
லூதியானா: பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ரயில் நிலையத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த 27 வயது பெண் சாந்த் கான் என்பவர் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த அவரிடம் போலீசார் பாஸ்போர்ட்டை காண்பிக்குமாறு கூறினர். அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கராச்சியைச் சேர்ந்த அந்த பெண் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வருகிறார் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லூகூரில் ரயில் ஏறியதாக அவர் தெரிவித்துள்ளார். சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ் வழக்கமாக ஜலந்தரில் நிற்காது. ஆனால் அதில் மர்ம பெண் வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து ரயில் அங்கு நிறுத்தப்பட்டது.
டெல்லி செல்ல ரயில் ஏறியதாகவும் அங்குள்ள மத வழிபாட்டு ஸ்தலத்திற்கு செல்வதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். ஆனால் எந்த ஸ்தலம் என்பது அவருக்கே தெரியவில்லை. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தினாநகரில் நடந்த தீவிரவாத தாக்குதலை அடுத்து மாநில போலீசார் எதையும் லேசாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.
நேற்று குர்தாஸ்பூர் பேருந்து நிலையம் அருகே கிடந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து சோதனை செய்து அந்த பொருள் வெடிகுண்டு அல்ல என்பதை தெரிவித்த பிறகே மக்கள் நிம்மதி அடைந்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications