திடீர் மயக்கம்: அமைச்சர் சதானந்த கவுடாவின் மருமகள் என கூறிய நடிகை மருத்துவமனையில் அனுமதி
பெங்களூர்: மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக்கின் மனைவி என்று கூறிய நடிகை மைத்ரியா கவுடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக்கிற்கு கடந்த 27ம் தேதி கொடகு பகுதியில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்தது. இது நடந்த சில மணிநேரத்தில் கார்த்திக் தன்னை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் செய்துள்ளதாக கன்னட நடிகை மைத்ரியா கவுடா என்பவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் தெரிவித்ததோடு மட்டும் அல்லாமல் தான் கார்த்திக் கவுடாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டார்.

புகார்
செய்தியாளர்களை சந்தித்த பிறகு மைத்ரியா பெங்களூர் ஆர்.டி. நகர் காவல் நிலையத்தில் கார்த்திக் கவுடா மீது பாலியல் பலாத்காரம் மற்றும் மோசடி புகார் கொடுத்தார். அவரின் புகாரின்பேரில் போலீசார் கார்த்திக் மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்தனர்.

பொய்
மைத்ரியா கவுடா சொல்வது எல்லாம் பொய். அவர் வெளியிட்ட புகைப்படங்கள் போலியானவை என்று கார்த்திக் தெரிவித்தார்.

விளம்பரம்
சாண்டல்வுட்டில் வளர்ந்து வரும் நடிகையான மைதிர்யா சீப் பப்ளிசிட்டி தேடுவதாக கார்த்திக்கின் நண்பர்கள் அவர் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

மயக்கம்
மத்திய அமைச்சரின் மகன் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய மைத்ரியா திடீர் என்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் தற்போது பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீக்
மைத்ரியா வீக்காக இருப்பதால் தான் மயங்கியதாக கூறப்படுகிறது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சியை உள்ளூர் தொலைக்காட்சி சேனல் ஒன்று ஒளிபரப்பியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications