சீமானிடம் கேரள காவல்துறையினர் விசாரணை.. நாம் தமிழர் கட்சி கண்டனம்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு, நாம் தமிழர் கட்சி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.
திருவனந்தபுரம்: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு, நாம் தமிழர் கட்சி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.
கேரளாவில் வெள்ள பாதிப்புகள் நிவாரண பொருட்கள் வழங்க நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேரளாவிற்கு இன்று காலை சென்றுள்ளார். வாகனம் நிறைய பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

ஆனால் கோட்டயத்தில் சீமான் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டயம் போலீசார் அவரிடம் 2 மணி நேரம் விசாரித்தனர்.ஆனால் 2 மணி நேரத்தில் போலீஸ் விசாரணைக்கு பின் சீமான் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சீமான் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு, நாம் தமிழர் கட்சி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், தென்மேற்குப் பருவமழை ஏற்படுத்திய மிக அதிகப்படியான மழைப்பொழிவால் பெரும்வெள்ளத்தை எதிர்கொண்டு பெரும்பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மலையாளச் சகோதரர்களுக்கு மானுடத்தோடு மலையாள மக்களின் துயரில் பங்கேற்று அவர்கள் மீண்டெழ நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யும் நோக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் வெள்ள நிவாரணப் பொருட்களைச் சேகரித்து கொண்டு செல்லப்பட்டது.
நேற்று 25-08-2018 மாலை 06 மணியளவில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாசேரி முகாமிற்கு சென்று வழங்கினார்கள். நிவாரணப் பொருட்களை வழங்கிவிட்டு தமிழகம் திரும்பும் வழியில் நிவாரணப் பொருட்களை ஏற்றி சென்ற வாகனங்களில் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் உருவப்படம் பொறிக்கப்பட்ட பதாகைகள் இருந்தது.
இதை காரணம்காட்டி அங்கிருந்த பாஜக-வினர் நிவாரணப் பொருட்களை வழங்க எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி கோட்டயம் கிழக்கு காவல்நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டு வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கச் சென்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 100க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினரிடம் 4 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய பின்னர் வாகனங்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். கேரள காவல்துறையின் இச்செயலுக்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார், என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
"Make Kerala Great Again.." கேரளாவில் வீதி வீதியாக வாக்கு கேட்கும் டிரம்ப்.. டிரெண்டாகும் வீடியோ -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
யாருக்கு ஓட்டு போட போறீங்க! வாரிசு அரசியலுக்கா? சீமான் சட்டசபைக்கு போகனும்! சீனுக்குள் வந்த சேரன்! -
Land Rover Defender கான்வாயில் வரும் ஸ்டாலின் பெயரில் ஒரு வாகனம் கூட இல்லை! சீமான் சொத்து எவ்வளவு? -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
ஒரே ஒரு தோட்டா.. காட்டி விடுவேன் டாட்டா.. சமூக விரோதிகளுக்கு சீமான் வார்னிங் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications