தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: இன்று பிரதமர்-மீனவப் பிரதிநிதிகள் சந்திப்பு
டெல்லி: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், அந்நாட்டு கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவ அமைப்புகளை சேர்ந்த 20 பேர் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்திக்கிறார்கள்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 210 பேரையும், 75 விசைப்படகுகளையும் விடுவிக்கக்கோரி நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மீனவர்கள் கடந்த 11ம் தேதியில் இருந்தும், தாலுகா மீனவர்கள் 16ம் தேதியில் இருந்தும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 21ம் தேதி முதல் நாகையில் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மீனவர்களுக்கு ஆதரவாக கடையடைப்பு போராட்டமும் நடந்தப் பட்டது.
அதன் பின்னர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் 12 பேர் சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து இது குறித்து பேசினர். அதன்பிறகு, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்ததாக மீனவ சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அதேநேரத்தில், உண்ணாவிரதம் இருந்த மீனவர்களை திமுக தலைவர் கருணாநிதி உத்தரவின்பேரில், சந்தித்த பாராளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலு, ‘இந்த பிரச்னை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தார்.
இதையடுத்து, மீனவர்கள் கடந்த 24ம் தேதி தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர். ஆனால், மீனவர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்து இன்று 17வது நாளாக நடந்து வருகிறது.
இந்நிலையில், நாகை அக்கரைப்பேட்டை ஊராட்சி மன்றத்தலைவர் மனோகரன், மீனவர் அமைப்பை சேர்ந்த கவுதமன், எஸ்கேஜி.சேகர், முத்து, தட்சிணாமூர்த்தி, சுரேஷ், புதுகை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த முருகன், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் உள்பட 20 பேர் இடம் பெற்றுள்ள குழு, இன்று டெல்லியில் பிரதமரைச் சந்திக்க உள்ளனர். இவர்களுடன் நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலு, நாகை மாவட்ட திமுக செயலாளர் ஏகேஎஸ்.விஜயன் எம்.பி ஆகியோர் உடன் செல்கின்றனர்.
இந்தச் சந்திப்பின்போது, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும். இரு நாட்டு மீனவ சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேச ஏற்பாடு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்த உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும் அவர்கள் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications