சிங்கிள் பாய்ஸ் கொண்டாடி தீர்க்கும் டெம்ஜென் இம்னாவுக்கு பெரிய வெற்றி.. அடித்து நொறுக்கும் பாஜக
நெட்டிசன்களின் பெருவாரியான ஆதரவை கொண்ட டெம்ஜென் இம்னா அலோங் வெற்றி பெற்றுள்ளார்.
கோஹிமா: நாகாலாந்து தேர்தல் முடிவுகள் இப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்களில் ஒருவரான டெம்ஜென் இம்னா அலோங் வெற்றி பெற்றுள்ளார்.
நாகாலாந்தில் இப்போது எம்டிபிபி- பாஜக ஆட்சி கூட்டணியில் இருக்கிறது. அங்கு 2018 தேர்தலில் எம்டிபிபி 18 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் வென்றிருந்தது.
நாகாலாந்தில் கடந்த தேர்தலில் என்பிஎப் மொத்தமுள்ள 60 இடங்களில் 26 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியை உருவெடுத்த போதிலும் அவர்களால் பெரும்பான்மை பெற முடியவில்லை.

நாகாலாந்து
இதையடுத்து எம்டிபிபி- பாஜக கூட்டணி ஆட்சி அங்கு அமைந்தது. இதே கூட்டணி இப்போதும் நாகாலாந்து தேர்தலில் களமிறங்குகிறது. இதில் பாஜக கூட்டணி 36 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதேநேரம் காங்கிரஸ் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. கடந்த தேர்தலில் 26 இடங்களில் வென்ற என்பிஎப் எனப்படும் நாகாலாந்து மக்கள் முன்னணி இப்போது வரை வெறும் 7 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது.

டெம்ஜென் இம்னா அலோங்
இதன் மூலம் அங்கு பாஜக கூட்டணி எளிதாக ஆட்சியை பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு பாஜக வேட்பாளர்களில் டெம்ஜென் இம்னா அலோங் மீது தான் பலரது கவனமும் இருக்கிறது. நாகலாந்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் டெம்ஜென் இம்னா அலோங். அந்த மாநில உயர் கல்வி மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சராகவும் டெம்ஜென் இம்னா அலோங் இருக்கிறார்.

கலகல ட்வீட்கள்
தேர்தல் பரபரப்புக்கு மத்தியிலும் ட்விட்டரில் தனது வழக்கமான ஜாலியான பதிவுகளை போட்டு நெட்டிசன்களையும் டெம்ஜன் இம்னா கலகலப்பாக்கி வந்தார். வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த டெம்ஜன் இம்னா அலோங் சற்று குண்டாகவும் சிறிய கண்கள் கொண்டவர். அவரது உடல் அமைப்பை கேலி செய்பவர்களையும் கூட தனது பாணியில் ரசிக்க வைக்கும் வகையில் பதிலடி கொடுத்து வருபவர் டெம்ஜென் இம்னோ அலோங்.. சமூக வலைத்தளங்களில் இவருக்காக ரசிகர் பட்டாளமே உள்ளது.

சிங்கிள் பசங்க
42-வயதான டெம்ஜென் இம்னா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதனால் தமிழ்நாட்டில் இருக்கும் பல நெட்டிசன்களும் கூட டெம்ஜென் இம்னாவுக்கு ரசிகர்களாகவே உள்ளனர். ஏனென்றால், இவர் அடிக்கடி சிங்கிளாக இருப்பது பற்றி மிகவும் ஜாலியாக பதிவிட்டு வருவார். சமீபத்தில் கூட 'அழகாகவும் சிங்கிளாகவும் இருந்தால், எங்குச் சென்றாலும் புகைப்படம் எடுப்பவர்களைக் கவர்ந்து விடுவீர்கள்" என்று ட்வீட் செய்திருந்தார். இப்படிப் பதிவிடுவதால் சிங்கிள் பசங்க ஆதரவுகள் இவருக்குத் தான் இணையத்தில் முழுமையாக உள்ளது.

முன்னிலை
டெம்ஜென் இம்னா இப்போது நாகாலாந்தில் அலோங்டாகி தொகுதியில் இருந்து களமிறங்கினார். இந்தியா முழுக்க நெட்டிசன்கள் மத்தியில் ஆதரவு இருக்கும் இவருக்கு.. அவரது தொகுதியில் ஆதரவு இருக்காதா என்ன.. இப்போது அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே அவரே முன்னிலையில் இருந்தார். இதனிடையே இப்போது அங்கு அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகாலாந்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ள நிலையில், டெம்ஜென் இம்னாவின் வெற்றி... அவரது ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications