திரிபுராவில் பாஜக ஆட்சி, மேகாலயாவில் தொங்கு சட்டசபை, நாகாலாந்தில் என்டிபிபி கூட்டணி ஆட்சி- Live
வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்று இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் தெரியவரும்.
டெல்லி: வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயாவில் சட்டசபை தேர்தலையொட்டி பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணத் துவங்கியுள்ளன. முதலில் தபால் ஓட்டுகளை எண்ணும் பணியானது தொடங்கியுள்ளது.

தலா 60 உறுப்பினர்களை கொண்ட திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநில சட்டசபைகளின் ஆயுட்காலம் முடிவடைவதையொட்டி தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் 59 தொகுதிகளுக்கு கடந்த 18-ந்தேதி நடைபெற்ற தேர்தலில் 74 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
மேகாலயாவின் 59 தொகுதிகளுக்கும் நாகாலாந்தின் 59 தொகுதிகளுக்கும் கடந்த 27-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் மேகாலயாவில் 67 சதவீதமும், நாகாலாந்தில் 75 சதவீதமும் ஓட்டுகள் பதிவானது.
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் ஒருவர் மரணம் அடைந்ததாலும் மேகாலயாவில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கொல்லப்பட்டதாலும் தலா ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. நாகாலாந்தை பொறுத்தவரை வடக்கு அங்காமி-2 தொகுதியில் போட்டியிட்ட தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தலைவர் நெய்பியூ ரியோ போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதால் எஞ்சிய 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
இந்த 3 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஆட்சியை கைபற்றப்போவது யார் என்பது தெரியவரும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications