அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆனார் நடிகை நக்மா
டெல்லி: அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
கோலிவுட், டோலிவுட், பாலிவுட், போஜ்புரி படங்களில் நடித்துள்ளவர் நக்மா. ஆன்மீகத்தில் ஈடுபட்டிருந்த நக்மா அரசியல் பக்கம் சென்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவர் தேர்தல் நேரங்களில் கட்சியின் வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.

இந்நிலையில் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நக்மா நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பெயரை பரிந்துரை செய்ததை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டார்.
முன்னாள் மத்திய அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் உள்பட 11 பேரின் பெயர்கள் பொதுச் செயலாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. டெல்லி மகளிர் காங்கிரஸ் தலைவராக டெல்லி மகளிர் ஆணைய தலைவராக இருந்த பர்கா சுக்லா சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலாளர்களாக 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் நியமன பட்டியலுக்கு ராகுல் ஒப்புதல் அளித்துள்ளது இதுவே முதல் முறை ஆகும். வழக்கமாக இந்த பட்டியல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலின்பேரில் தான் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications