பலாத்காரம் போன்ற கொடூரங்களில் ஈடுபடும் சிறார்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் - நஜ்மா ஹெப்துல்லா
டெல்லி: பாலியல் பலாத்காரம் போன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவோர் சிறார்களாக இருந்தாலும், குற்றத்தின் கடுமையைக் கருதி அவர்களுக்கும் கடும் தண்டனை தரப்பட வேண்டும் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா கூறியுள்ளார்.

சமீபகாலமாக பாலியல் தொடர்பான குற்றங்கலில் சிறார்களும் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. ஆனால், அத்தகைய குற்றங்களில் கைது செய்யப்படும் சிறார்கள் வயதைக் காரணம் காட்டி கடும் தண்டனைகளில் இருந்து தப்பி விடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், பாலியல் குற்றவாளிகள் வயதைக் காரணம் காட்டி கடுமையான தண்டனையிலிருந்து தப்பி விடக் கூடாது என பேட்டியளித்துள்ளார் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியிருப்பதாவது :-
கடும் தண்டனை...
கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவோரில் பலர் சிறார்கள் இருப்பதால் கடும் தண்டனையிலிருந்து தப்பித்து விடுகிறார்கள்.
சிறார்கள் தான் அதிகம்....
குறிப்பாக பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடும் பலரில் சிறார்கள்தான் அதிகம் உள்ளனர்.
தண்டனை...
ஆனால் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்களையும், வயதான பிற குற்றவாளிகளுக்கு இணையாகவே கருத வேண்டும். தண்டனையும் வழங்க வேண்டும்.
தொடரத் தான் செய்யும்....
இப்படிப்பட்டவர்களை வயதைக் காரணம் காட்டி தண்டிக்காமல் விட்டு விட்டால், அதேபோன்ற குற்றச் செயல்கள் தொடரத்தான் செய்யும். மேலும் அத்தகைய குற்றச் செயல்களின் கடுமையும் குறையாமல் தொடரத்தான் செய்யும் என்று அவர் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications