சக்கை போடுபோடும் நமோ மாத்திரை, ராகா பிளம் வலி நிவாரணிகள்!
டெல்லி: லோக்சபா தேர்தல் நேரத்தில் மோடியின் பெயரை பிரபலப்படுத்த ‘நமோ' டீக்கடையை பாஜகவினர் தொடங்கினர். அவர்களுக்கு போட்டியாக ‘ராகா பால்' விற்கத் தொடங்கினர் காங்கிரஸ் கட்சியினர்.
தேர்தல் ஜூரத்திற்கு ஏற்ப எங்கும் எதிலும் நமோ கோஷம் ஒலித்தது. இதை பயன்படுத்திய பார்மஸி நிறுவனம் ஒன்று வலிநிவாரணி மாத்திரை, தைலங்களுக்கு ‘நமோ', ‘ராகா' பெயரை பயன்படுத்தி விற்பனை செய்தது.

விற்பனை அமோகம்
இந்த வலி நிவாரணி மாத்திரை, தைலம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறதாம்

நமோ மாத்திரை
காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு பயன்படுத்தும் நிமுசிலைட் மற்றும் பாராசிடமால் மாத்திரைகளின் கலவையாக தயாரிக்கப்பட்டுள்ள மாத்திரைக்கு நமோ மாத்திரை என பெயரிடப்பட்டுள்ளது.

ராகா பிளம்
இதே போன்று வலிக்கு பயன்படுத்தப்படும் டைகோஃபினக் மற்றும் பாராசிடமால் ஆகியவற்றின் கலவையான மாத்திரைக்கு ராகாபிளம் என பெயரிடப்பட்டுள்ளது.

200000 மாத்திரைகள்
நமோ மாத்திரைகள் அடங்கிய ஒரு அட்டையின் விலை ரூ.36க்கு விற்பனை செய்யப்படுகிறது. ராகா மாத்திரை ஒரு அட்டை 16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை அறிமுகப்படுத்திய சில வாரங்களிலேயே 20 லட்சம் நமோ மற்றும் ராகா மாத்திரைகள் விற்பனையானதாம்.

விலை கம்மிதான்
தங்கள் தயாரிப்புகளின் மதிப்பையும், விற்பனையையும் அதிகரிப்பதற்காக முதல் முறையாக மருந்துகளுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு பெரிய முக்கிய தலைவர்களின் பெயர்களில் மருந்துகளை விற்பனை செய்து வருவதாக குர்கனைச் சேர்ந்த ஐசிஐ ஹெல்த்கேரின் இயக்குனர் நவீன் ஜெயின் தெரிவித்துள்ளார்.

விற்பனை அமோகம்
பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்திர பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நமோ மத்திரைகளும், ராகாபிளம் மத்திரைகள் அதிகம் விற்பனையாகி வருகின்றன.

திதி, லாலு பெயர்களும் இருக்கு
வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் மருந்திற்கும் நமோனிஜெல் என பெயரிடப்பட்டுள்ளது. நமோ மற்றும் ராகா தவிர, திதி டைஜின், லாலு சிரப் உள்ளிட்டவைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.

எல்லாம் பிஸினஸ் டிரிக்
வலி நிவாரணிகள் காய்ச்சல், தலைவலி, உடல்வலி ஆகியவைகளை போக்க வல்லவை. ஆனால் நமோ, ராகா என்று அரசியல் தலைவர்களின் பெயர்களைச் சூட்டி விற்பனை அதிகரித்து வருகின்றனர் மாத்திரை தயாரிப்பாளர்கள்.

நமோ நமோ கோஷம்
தேர்தல் நேரத்தில் எங்கும் எதிலும் நமோ மயமாக இருந்தது. டிஸ்யூ பேப்பர், மவுத் ப்ரெஸ்னர், ஹோலி கலர், டிசர்ட், ஜக்,மற்றும் மருத்துவ நிறுவனங்களும் மோடியின் பெயரை உக்தியாக பயன்படுத்தி கல்லா கட்டினார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications