• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

11 பேர் பலியானதற்கு மூளையாக செயல்பட்டது பாட்டியின் மகன்தான் ... திருமண வீடு இழவு வீடான சோகம்

By Lakshmi Priya
|
  11 பேர் தற்கொலை வழக்கில் தொடர்புடைய சாமியாருக்கு போலீஸ் வலை வீச்சு- வீடியோ

  டெல்லி: 11 பேர் பலியான சம்பவத்தில் பாட்டியின் மகன் லலித் பாட்டியாதான் மூளையாக செயல்பட்டுள்ளார்.

  டெல்லி புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பிரேதங்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  பிரேத பரிசோதனையில் போலீஸாருக்கு துப்பு கிடைத்தது. அதாவது இவர்கள் 11 பேரும் எந்த வித போராட்டமுமின்றி உயிரை மாய்த்துள்ளனர்.

  11 பேர் பலி

  11 பேர் பலி

  இந்த மரணத்தில் பல்வேறு திடுக் தகவல்கள் கிடைத்துள்ளன. இறைவனை காண்பதற்காக தங்கள் உயிரை மாய்த்து கொண்டால் அந்த இறைவனே தங்களை காப்பாற்றுவர் என்ற நம்பிக்கை இவர்களிடமிருந்து இருந்தது. இந்த மூடநம்பிக்கையால் 11 பேரும் உயிரிழந்துவிட்டனர்.

  கைகள் கட்டப்பட வேண்டும்

  கைகள் கட்டப்பட வேண்டும்

  தூக்கில் தொங்கிக் கொள்ள ஒருவருக்கு மற்றொருவர் உதவி செய்திருப்பது தெரியவந்ததுள்ளது. பெரிய ஹாலில் அனைவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். முகங்கள், கைகள், வாய் ஆகியன டேப் போட்டு சுற்றப்பட்டிருந்தது. பூஜை செய்தவுடன் அனைவரும் அவரவர் கைகளை கட்டிக் கொள்ள வேண்டும் என்பதும் நோட்டில் எழுதியிருந்ததாம்.

  ரொட்டி ஆர்டர்

  ரொட்டி ஆர்டர்

  நாராயண் தேவியை பெப்பே என்று அந்த குறிப்பில் அழைத்துள்ளனர். அவர் படுக்கையில் பெல்ட், துணி இருந்துள்ளன. இறப்பதற்கு முன்னர் குடும்பத்தினர் இரவு 10.40 மணிக்கு 20 ரொட்டிகளை ஆர்டர் செய்து உண்டுள்ளனர். அந்த ரொட்டிகளை நாராயண் தேவி ஊட்டி விடுவார் என்று எழுதியிருந்தது.

  தந்தை போல்

  தந்தை போல்

  நாராயண் தேவியின் மகன் லலித் பாட்டியா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தந்தை கோபால் தாஸை போல் சில நேரங்களில் நடந்து கொண்டதும் தெரியவந்தது. இறைவனிடம் செல்வதன் மூலம் தங்கள் குடும்பத்தை தந்தை வழிநடத்துவார் என்று லலித் நம்பியுள்ளார்.

  கடவுள் காப்பார்

  கடவுள் காப்பார்

  தற்கொலை செய்து கொண்டால் இறக்க மாட்டோம் என்றும் கடவுள் தம்மை காப்பாற்றுவார் என்றும் லலித் பாட்டியா கூறியதன் மூலம் இந்த மாஸ் தற்கொலைக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். மேலும் நாராயண் தேவியும் ஏற்கெனவே தனது கழுத்தை நெறித்தும், தூக்கிட்டும் உயிர் போகவில்லை என்பதால் கடவுள் காப்பாற்றுவார் என நம்பியுள்ளனர்.

  யார் என்பது தெரியவில்லை

  யார் என்பது தெரியவில்லை

  அந்த டைரியில் "நான் நாளை அல்லது நாளை மறுநாள் வருகிறேன். இல்லாவிட்டால் இன்னொரு நாள் வருகிறேன். லலித் பற்றி கவலைப்பட வேண்டாம். நான் வந்தால் அவர் பதற்றமடைந்துவிடுகிறார்" என்ற குறிப்புகளும் இடம்பெற்றிருந்தன. இவர் யார் என்பது தெரியவில்லை. ஜூன் 17-ஆம் தேதிதான் நாராயண் தேவியின் பேத்தி பிரியங்காவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த ஆண்டில் ஒரு நல்ல நாள் பார்த்து திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இறப்புக்கு முன்னர் பிரியங்கா தனது உறவினருடன் திருமணத்துக்கான ஷாப்பிங் குறித்து பேசியுள்ளார். திருமண வீடு இழவு வீடானதை எண்ணி உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  புதுடெல்லி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
  ஸ்டிரைக் ரேட்
  BJP 58%
  INC 42%
  BJP won 7 times and INC won 5 times since 1952 elections

   
   
   
  English summary
  Lalit Bhatia, the son of 77-year-old Narayan Devi, was the "brain" behind the deaths. Narayan Devi, earlier believed to have been strangled, also hanged herself.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more