முகேஷ் அம்பானிக்காக எரிவாயு விலையை உயர்த்த கோரினார் மோடி: கேஜ்ரிவால் புகார்
சண்டிகர்: முகேஷ் அம்பானிக்காக எரிவாயு விலையை மூன்று முடங்க உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தவர் குஜராத் முதல்வரும் பாஜக வேட்பாளருமான நரேந்திர மோடிதான் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் சாடியுள்ளார்.
சண்டிகரில் லோக்சபா தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட கேஜ்ரிவால் பேசியதாவது:

முகேஷ் அம்பானி என்ற ஒரு நபருக்காக இயற்கை எரிவாயு விலையை மூன்று மடங்க உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரியவர் மோடி. அப்படி விலை உயர்த்தப்பட்டால் ஏழை விவசாயிகளைத்தான் பாதிக்கும். நாட்டின் பண வீக்க விகிதம் அதிகரிக்கும்.
ஆனால் முகேஷ் அம்பானி என்ற ஒருநபர் மட்டுமே பயனடைவார். மோடியும் ராகுலும் அம்பானியின் விமானத்தைத்தான் தங்களது பயணத்துக்கு பயன்படுத்துகின்றனர். அதனால் அம்பானியின் நலன்களுக்காகவே அவர்கள் சிந்திக்கின்றனர்.
நாடு முழுவதும் நான் பயணம் மேற்கொள்கிறேன்.. எனக்குத் தெரிந்த வகையில் மோடி அலை எங்கும் வீசவில்லை. மோடி அலை என்பது ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு பிம்பமே..
அப்படி மோடி அலை வீசுகிறது எனில் ஏன் அவர் 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும்? நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில்லாத காரணத்தாலேயே அவர் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்பதுதான் உண்மை.
இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications