மே 26ம் தேதி பதவியேற்கிறார் பிரதமராக நரேந்திர மோடி
டெல்லி: அமைச்சரவையில் யாரை சேர்ப்பது? யாரை கழற்றிவிடுவது என்று போராடிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி வரும் மே 26ம் தேதியன்று அமைச்சர்களுடன் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை வைத்த பின் இத் தகவலை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இன்று காலை பாஜக நாடாளுமன்றக் குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 15 பேர் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி.

இதை ஏற்றுக் கொண்ட பிரணாப் முகர்ஜி புதிய அரசு அமைக்க நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து நிருபர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், எங்களது கூட்டணிக் கட்சியினர் நரேந்திர மோடி பிரதமராக கடிதங்கள் தந்தனர். அதையும் பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் நாடாளுமன்றக் குழுத் தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்ட கடிதத்தையும் ஜனாதிபதியிடம் தந்தோம்.
வரும் 26ம் தேதி திங்கள்கிழமை அவரும் அமைச்சரவையும் பதவியேற்பர் என்றார்.
பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வென்ற போது அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கம்தான் யார் அமைச்சர்களாக வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொண்டிருக்கிறது. இதனால் தாம் விரும்பியபடி அமைச்சர்களை நியமிக்க முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார் நரேந்திர மோடி.
ஏற்கெனவே நாளை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கக் கூடும் என்று கூறப்பட்டது. பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 24-ந் தேதி சனிக்கிழமையன்று மோடியும் சில கேபினட் அமைச்சர்களும் பதவியேற்கக் கூடும் என்றன பாஜக வட்டாரங்கள்.
ஆனால், வரும் 26ம் தேதி தான் பதவியேற்பு விழா நடக்கும் என்று இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications