உலககோப்பை கபடி: 'ஹாட்ரிக்' பட்டம் வென்ற இந்திய அணிக்கு மோடி, சச்சின், அபிஷேக் வாழ்த்து
டெல்லி: உலககோப்பை கபடி இறுதிப் போட்டியில் ஈரான் அணியை வீழ்த்தி ஹாட்ரிக் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி, விளையாட்டு வீரர்கள் சச்சின், ரெய்னா, அமித் மிஸ்ரா, பாலிவுட் நட்சத்திரங்கள் அபிஷேக் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உலகக்கோப்பை கபடி போட்டி நடைபெற்றது. லீக் போட்டி மற்றும் அரையிறுதிப் போட்டிகளுக்குப் முடிந்த நிலையில் இந்தியா, ஈரான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இரவு 7.55 மணிக்கு நடந்த இந்த போட்டியில் இந்தியா, ஈரான் அணிகள் மோதின.

தொடர்ந்து இரண்டு முறை பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஈரான் அணி தொடக்கத்தில் கடும் நெருக்கடி தந்தது. இதனால் முதல் பாதியில் ஈரான் 18-13 என முன்னிலைப் பெற்றது. இரண்டாம் பாதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்தியா. இறுதியில் இந்தியா 38-29 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது.
இந்த நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், உலகக்கோப்பை கபடி போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். உறுதிப்பாட்டுடன், அசாதாரணமான திறன்களை இந்திய அணி வெளிப்படுத்தியது என்று குறிப்பிட்டுள்ளார்.
Congratulations to Indian team for winning the Kabaddi World Cup. The team showed exceptional skills, grit & determination. Well done!
— Narendra Modi (@narendramodi) October 22, 2016
மேலும், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, வி.கே.சிங், ராம்விலாஸ் பஸ்வான், விஜய் கோயல் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதேபோல், பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அபிஷேக் பக்சன் மற்றும் விளையாட்டு வீரர்கள் சச்சின், சுரேஷ் ரெய்னா, அமித் மிஸ்ரா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications