பிரதமர் பதவிக்கு குஜராத் முதல்வர் மோடி மிக சரியான தேர்வு- முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர்
அகமதாபாத்: நாட்டின் பிரதமர் பதவிக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மிக சரியான தேர்வு என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தெரிவித்துள்ளார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து கிருஷ்ணய்யர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

பிரதமர் பதவிக்கு மோடி தகுதியானவர்
அந்த கடிதத்தில் லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளாராக நரேந்திர மோடியை அறிவித்ததை வரவேற்கிறேன். அவர் மிகச் சரியான தேர்வு. பிரதமர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர் மோடி.

சூரிய சக்திதான் கொள்கை
நாட்டின் மீதான அக்கறை, அவருடைய அணுகுமுறை போன்ற குணநலன்கள் அவருக்கு இந்த வாயப்பைப் பெற்று தந்துள்ளது. இந்தியாவுக்கு அணுமின் திட்டங்கள் தேவையில்லை. அணுசக்தி வேண்டாம், சூரியசக்தியே வேண்டும் என்பது எனது கொள்கை.

குஜராத்- சூரிய சக்தி மாநிலம்
என்னைப் போன்று நரேந்திர மோடியும் சூரியசக்திக்கு ஆதரவானவர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் சூரியசக்தி திட்டங்களை செயல்படுத்தி மின்உற்பத்தியை பெருக்கிக் காட்டியவர். 'சூரிய சக்தி' மாநிலமாக குஜராத்தை மாற்றியமைத்துள்ளார் நரேந்திர மோடி.

காந்திய கொள்கையை ஊக்கப்படுத்தும் மோடி
காந்தியின் மது அருந்தாமை கொள்கையைக் கடைப்பிடிக்கும் ஒரே மாநிலம் மோடி ஆளும் குஜராத் மட்டுமே. ஊழலற்ற மாநிலமாக குஜராத்தை மாற்றும் முயற்சியிலும் மோடி ஈடுபட்டு வருகிறார்.

மோடியை ஆதரியுங்கள்
மோடியின் செயல்பாடுகள், அவரது நிர்வாகத் திறமையை தேசிய அளவில் பயன்படுத்திக் கொள்ள அவரை நாம் ஆதரிக்க வேண்டும்.

மோடியால் சுஜயராஜ்ஜியம்
பிரதமராவதற்கு மோடிக்கு இதுபோன்றதொரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், நாட்டில் சுயராஜ்ஜியத்தை நிலைநாட்டவும்,வறுமையை அறவே ஒழித்திடவும் அவர் பாடுபட வேண்டும்.

மோடி ஒரு சோசியலிஸ்ட்
அடிப்படையில் நான் சோசியலிஸ்ட். எனவே மோடியை ஆதரிக்கிறேன். மோடியும் ஒரு சோசியலிஸ்ட்தான். இந்திய ஒருமைப்பாடு, அரசியல் சமூக, பொருளாதாரத்தைப் பேணுவதில் காந்திய சிந்தனையையும் அவர் பின்பற்றுகிறார் என்று கூறியுள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications