இந்தியாவின் மிகப் பிரபலமான தலைவர் மோடிதான்!- கருத்துக் கணிப்பு முடிவு
டெல்லி: இந்தியாவின் மிகவும் பிரபலமான தலைவராக பிரதமர் நரேந்திர மோடி திகழ்வதாக கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
ஏபிபி நியூஸ் - நீல்சன் அமைப்பு மேற்கொண்ட இந்த கருத்துக் கணிப்பில் 58 சதவீதம் பேர், மோடியை இந்தியாவின் மிகப் பிரபல தலைவர் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் பா.ஜ.க., தலைமையிலான அரசின் செயல்பாட்டில் கணிசமான அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

இப்பவே தேர்தல் வைத்தாலும்
கருத்துகணிப்பின் படி தற்போது மக்களவை தேர்தல் நடைபெற்றாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 38 சதவீதம் வாக்குகளை பெறும் என்றும் 301 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கூறப்படுகிறது.

காங்கிரசுக்கு 108தான்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 28 சதவீதம் வாக்குகளை பெறும். 108 தொகுதிகளில் வெற்றி பெறும். கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 62 இடங்களை மட்டுமே கைப்பற்றி இருந்தது.

செல்வாக்கு குறைவதும் உண்மைதான்
47 சதவீதம் மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக கூறியுள்ளனர். பிரதமராக மோடியின் செயல்பாடு குறித்த கேள்விக்கு 17 சதவீதம் பேர் மிகவும் நன்றாக உள்ளதாகவும், 30 சதவீதம் பேர் நன்றாக உள்ளதாகவும். அதே 30 சதவீதம் பேர் சுமார் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தாத்ரி படுகொலை
தாத்ரி படுகொலை சம்பவம் குறித்து மோடி பேசியிருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு ஆம் என்று 57 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். 27 சதவீதம் பேர் தேவையில்லை என்றும் கூறியுள்ளனர்.

ராமர் கோயில் கட்டலாம்
65 சதவீதம் பேர் மோடி அரசு ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக முதற்கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
மக்கள் மனநிலையைத் தெரிந்து கொள்வதற்கான கருத்துக் கணிப்பு இது என்று ஏபிபி நியூஸ் - நீல்சன் அமைப்பு தெரிவித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications