மோடி நல்ல பேச்சாளரும் அல்ல.. அவர் பேச்சை கேட்க யாரும் போவதும் இல்லை..: உமாபாரதி தாக்கு!
ஜான்சி: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சிறந்த பேச்சாளர் அல்ல.. அவரது பேச்சை கேட்பதற்காக என யாரும் கூட்டத்துக்கு செல்லவில்லை.. அவருக்கு ஆதரவு தெரிவிக்க மட்டுமே செல்கின்றனர் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் ஜான்சி தொகுதி வேட்பாளருமான உமாபாரதி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி தொகுதியில் போட்டியிடுகிறார் மத்திய பிரதேச முன்னாள் முதல்வரான உமாபாரதி. ஜான்சி தொகுதியில் பாஜக தொண்டர்களிடையே நேற்று உமாபாரதி பேசியதாவது:

நீங்கள் யாராவது மோடியின் பேச்சை கேட்டிருக்கிறீர்களா? நமது கட்சியிலேயே அடல் பிகாரி வாஜ்பாய் மட்டுமே நல்ல பிரசார பேச்சாளர். அவருக்கு ஈடு இணை யாருமே இல்லை.
நன்றாக ஆராய்ந்து பாருங்கள்.. மோடி ஒரு நல்ல பேச்சாளர் அல்ல.. அவரது பேச்சைக் கேட்கத்தான் கூட்டம் கூடுவதாக நிறைய பேர் தவறாக எண்ணுகின்றனர்.. உண்மையில் எதற்காக அவ்வளவு கூட்டம் கூடுகிறது தெரியுமா?
மோடிக்கு ஆதரவு தெரிவிக்க மட்டுமேதான் அவ்வளவு கூட்டமும் செல்கிறதே தவிர அவருடைய பேச்சை கேட்பதற்காக அல்ல..
இவ்வாறு உமாபாரதி பேசினார்.
உமாபாரதியின் இந்த பேச்சு பாஜகவில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் உமாபாரதியோ தாம் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருக்கிறேன்.. மோடி ஒரு நல்ல பிரசார பேச்சாளர் இல்லைதான் என்று திரும்பவும் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications