Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலில் குளறுபடி: மோடி, ராகுல் பெயர் பதிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் பட்டியலில் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் தலைவர்களான நரேந்திர மோடி மற்றும் ராகுல் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கட்சி ஆரம்பித்த ஓராண்டிற்குள் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டது ஆம் ஆத்மி கட்சி. இந்நிலையில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு கட்சியின் உறுப்பினர்களை அதிகப் படுத்தும் வேலையில் அக்கட்சி இறங்கியுள்ளது.

அதன்படி மாநில வாரியாக புதிய உறுப்பினர்களைக் கட்சியில் சேர்க்கும் வேலையில் அக்கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

ஒரு கோடி இலக்கு....

ஒரு கோடி இலக்கு....

ஆம் ஆத்மி கட்சி நாளை மறுநாள் அதாவது ஜனவரி 26-ந் தேதிக்குள் ஒரு கோடி பேரை தங்களது கட்சியில் இணைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி, தற்போது ‘ஆம் ஆத்மி' கட்சியில் உறுப்பினர் எண்ணிக்கை 50 லட்சமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

முறையற்ற ஆட்சேர்ப்பு....

முறையற்ற ஆட்சேர்ப்பு....

ஆனால், முறையான தகவல்கள் சரிபார்ப்பு இல்லாத நிலையில் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும், பயம் இல்லாமல் உறுப்பினராக பதிவு செய்துக் கொள்ளும் விதமாக பல ஓட்டைகளைக் கொண்டுள்ளது ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் சேர்ப்பு முறை.

போலி அடையாள அட்டை....

போலி அடையாள அட்டை....

இதனைத் தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்ட பல விஷமிகள், போலியான பெயரில் தங்களது பெயரைப் பதிவு செய்துள்ளனர். மேலும், சிலர் குறும்புத்தனமாக பிரபலங்களின் பெயர்களில் உறுப்பினர் அட்டை பதிவு செய்துள்ளனர்.

மோடியும், ராகுலும்....

மோடியும், ராகுலும்....

அதன்படி, பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பெயர்களும் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

ஒபாமா....

ஒபாமா....

மேலும், ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி மற்றும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஆகியோரது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடி பெயர் இருமுறை....

மோடி பெயர் இருமுறை....

நரேந்திர மோடியின் பெயர் 2 முறை பதிவு செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் உள்ள குஜராத் பவன் முகவரியில் மோடியின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், டெல்லி முகவரியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் வாழும் ஒபாமா....

டெல்லியில் வாழும் ஒபாமா....

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பெயரில் உறுப்பினராக உள்ள நபர் தனது வீடு கிழக்கு டெல்லியில் இருப்பதாகவும் முகவரி அமெரிக்க வெள்ளை மாளிகை எனவும் பதிவு செய்துள்ளார்.

இது தான் நேரு நம்பராம்....

இது தான் நேரு நம்பராம்....

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பெயரில் உறுப்பினராக பதிவு செய்துள்ள நபர் தனது வயதை 100 என பதிவு செய்துள்ளார். மேலும், தொலைபேசிய எண்ணை வழக்கத்தில் இல்லாத எண்ணான 1010101010யை கொடுத்துள்ளார்.

ஏஞ்சலீனா ஜோலி....

ஏஞ்சலீனா ஜோலி....

பாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியும் ஆம் ஆத்மியின் உறுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

நிர்வாகத்திறமை...?

நிர்வாகத்திறமை...?

ஏற்கனவே, சமீபத்திய நடவடிக்கைகளால் போதிய நிர்வாகத் திறமை இல்லை என விமர்சனத்துக்கு ஆளாகி வரும் ஆம் ஆத்மி கட்சி, போலி உறுப்பினர் அட்டை விவகாரத்தால் மேலும் பிரச்சினையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+